

ஒரு பாடத்தை ஒரே நாளில் முழுமையாகப் படிக்காமல், பல பகுதிகளாகப் பிரித்துப் படியுங்கள். அவற்றைக் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் நினைவுகூரும்போது நீண்ட காலத்துக்கு மனதில் வைத்துக்கொள்ள முடியும்.
* தேர்வுக் காலத்தில் நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கக் கூடாது. உற்சாகத்தோடும் சுறுசுறுப்புடனும் இருக்கப் போதுமான உறக்கம் அவசியம்.
* அனைத்து வகையான சத்துகளும் நிறைந்த உணவை உண்ண வேண்டும். நடைப்பயிற்சி, ஓட்டம், சைக்கிளிங் என ஏதேனும் ஓர் உடற்பயிற்சியைத் தேர்வுசெய்து நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து மேற்கொள்ளலாம்.
* கிராஸ்வேர்டு, சுடோகு போன்ற விளையாட்டுகள் மூளையின் அறிவாற்றல், நினைவாற்றல், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த உதவும்.
* புதிய திறன்களைக் கற்றுக்கொள்வதும் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். இசை, மொழி அல்லது வேறு ஏதேனும் புதிய திறனைக் கற்றுக்கொள்ளலாம். ஒன்றைக் கற்கும் போது கிடைக்கும் அறிவு, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
* மூளைக்குப் பயிற்சி அளிக்க ‘ஜிக்சா’ (Jigsaw) புதிர்களும் உதவும். குறிப்பாகக் காட்சித் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ளும் திறனை மேம்படுத்த இது உதவுகிறது.
* ‘Fusioneering’ என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளை இணைத்துக் கற்றுக்கொள்வது. கணிதத்தை விளையாட்டுடன் கற்பது, அறிவியலுடன் ஓவியத்தை இணைத்துக் கற்பது போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள். இது ஆக்கபூர்வச் சிந்தனையை வலுப்படுத்த உதவும்.
* ஆண்டுகள், தேதிகள், எண்கள் போன்றவற்றை நினைவில் வைத்துக்கொள்ள, நமக்குத் தொடர்புடைய ஆண்டுகள் அல்லது நிகழ்வுகளுடன் அவற்றை இணைத்துக்கொள்ளலாம். மனப்பாடம் செய்ய வேண்டிய பகுதிகளை ஒரு கதையாகத் தொகுத்துக் கொள்வதும் நினைவில் நிறுத்த உதவும்.