நீண்ட ஆயுளுக்கு புதிய மருத்துவப் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 23

நீண்ட ஆயுளுக்கு புதிய மருத்துவப் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 23
Updated on
2 min read

மனித குலத்துக்கு இருக்கும் பெரிய அச்சுறுத்தல் வயதாவதுதான். உடலியல் இயக்கத்தில் அது ஓர் இயற்கை நிகழ்வு. மரத்தில் ஒரு புதிய தளிர் உருவாகும்போது, இலை ஒன்று வாடி விழத்தான் செய்யும்.

அதுபோல மனித உடலிலும் காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்வது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அண்மைக் கால மருத்துவ ஆராய்ச்சிகள், வயதாவதைத் தள்ளிப்போடும் அறிவியலை எட்டிப்பிடித்துவிட்டன.

மருத்துவப் புரட்சி

மருத்துவத் துறையில் ஆரோக் கியமான முதுமைக் காலமும் நீண்ட ஆயுளும் தொடர்பான (Healthy Ageing and Longevity) பிரிவு அதிவேகமாக வளர்ந்துவருகிறது.

மனித குலத்தின் இயற்கை நிகழ்வை மாற்றி அமைக்கப் போகும் இந்தத் துறை சார்ந்த படிப்பு களும் அறிமுகமாகிவிட்டன.

இந்தத் துறையை நீண்ட ஆயுளுக்கான மருத்துவம் (Longevity Medicine) அல்லது முதுமை எதிர்ப்பு அறிவியல் (Anti-Ageing Science) என்று குறிப்பிடுகிறார்கள்.

மரணத்தை யாரும் விரும்பு வதில்லை. செல்வச் செழிப்பு மிக்கவர் தொடங்கி எளியவர் வரை எல்லாருமே இன்னும் கொஞ்சம் நாள் வாழ மாட்டோமா என்றுதான் எதிர் பார்க்கிறார்கள்.

அதனால் ஆயுளை நீட்டிக்க வைக்கும் மருத்துவ ஆராய்ச்சிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்கின்றன நிறுவனங்கள். உலகம் முழுவதும் பல்கலைக் கழகங்கள், மருந்து நிறுவனங்கள் இணைந்து இந்தத் துறையில் தீவிரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

துறைசார் ஆராய்ச்சிகள்

‘உயிரணு மறு சீரமைப்பு' (Cell Reprogramming), ‘மரபணுப் பொறியியல்' (Gene Engineering), செயற்கை நுண்ணறிவு சார்ந்த நோய் கண்டறிதல் என்று ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வெளிவருகின்றன.

மிகப் பெரிய வாய்ப்புகளைக் கொண்டி ருக்கும் இந்தத் துறை நோக்கி சர்வதேச மாணவர்கள் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவிலுள்ள இளம் தலை முறையினரும் இந்தத் துறை மீது கவனம் செலுத்த வேண்டும்.

வயதாவது என்பது இயற்கை நிகழ்வு என்றாலும், ஆரோக்கியமாகவும் செயல்திறனுடனும் நீண்ட காலம் வாழ்வதற்கான அறிவியல் வழிமுறை களை ஆராய்வதே அறிவியலில் இத்துறையின் நோக்கம்.

நோய் வந்த பின்பு குணப்படுத்துவதிலிருந்து, நோய் வராமலே தடுப்பதை நோக்கி ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவே இத்துறைக்கான அடிப்படை. இதனால் மனிதர்கள் முதுமையிலும் சுறுசுறுப்பாகவும் தன்னிறைவுடனும் வாழ்க்கையை வாழ முடியும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

அனைவருக்கும் பிறந்த தேதியின் அடிப்படையில் வயது கணக்கிடப்படு கிறது. ஆனால் உடலின் தன் மையை வைத்து நம் உயிரியல் வயது (Biological Age) என்ன என்பதைக் கணக்கிட முடியும்.

45 வயதுக்காரரின் உயிரியல் வயது 35 ஆக இருக்கலாம், அல்லது 60 ஆகவும் இருக்கலாம். ‘Epigenetic Clocks’, ‘Telomere Length’ ஆகிய பரிசோதனைகள்போல ரத்தப் பரிசோதனை மூலமும் இதை அளவிட முடியும்.

நீண்ட ஆயுளுக்கான அறிவியல் துறையில் உயிரியல், உளவியல், தொழில்நுட்பம், ஊட்டச்சத்து ஆகிய அனைத்தும் அடங்குகின்றன.

சிறு வட்டத்துக்குள் உழன்று கொண்டிருக்காமல், எதிர்காலத்தில் மிகப் பெரும் வளர்ச்சியை எட்டவுள்ள புதிய படிப்புகளை நோக்கி நம் மாணவர்கள் நகர வேண்டும். அதற்கு இத்துறை மிகப் பொருத்தமானது.

- கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; ticf@indiacollegefinder.org

நீண்ட ஆயுளுக்கு புதிய மருத்துவப் படிப்பு - வேலைன்னு வந்துட்டா... | அத்தியாயம் 23
திறன் பெற்றவர்களை வரவேற்கும் வேலைவாய்ப்பு உலகம் | வெற்றி உங்கள் கையில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in