கடல்சார் துறையின் சர்வதேச வாய்ப்புகள் | களம் புதிது

கடல்சார் துறையின் சர்வதேச வாய்ப்புகள் | களம் புதிது
Updated on
1 min read

இந்தியாவிற்கு 7,516 கி.மீ. நீளமான பரந்த கடற்கரை இருப்பதால், கடல்சார் (Maritime) துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட சரக்குகள் கடல் வழியாகவே பரிமாற்றப்படு கின்றன. இதனால் கடல்சார் துறை உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறையாக மாறியுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 19 லட்சம் மெர்சன்ட் நேவி பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் இந்தியர்கள் சுமார் 12 சதவீதப் பங்களிப்பை அளிக்கின்றனர். இந்தியாவின் வெளி நாட்டு வர்த்தகத்தில், அளவின் அடிப் படையில் 95 சதவீதச் சரக்குகளும், மதிப்பின் அடிப்படையில் 70 சதவீதச் சரக்குகளும் கடல் போக்குவரத்தின் மூலமே நடைபெறுகின்றன.

பொருளா தார ஆய்வுகளின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியக் கடல் துறையின் சந்தை மதிப்பு 2,260 கோடி ரூபாயாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடல்சார் துறையில் பணியாற்ற பல்வேறு தொழில் வாய்ப்புகள் உள்ளன. மெர்சன்ட் நேவியில் டெக் ஆபிசர், மரைன் இன்ஜினீயர், எலக்ட்ரோ டெக்னிக் கல் ஆபிசர், கப்பல் பணியாளர் போன்ற பணிகளில் ஈடுபட முடியும்.

இத்துறையில் தொடக்க நிலையில்கூட மாதம் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம்வரை சம்பளம் பெறும் வாய்ப்பு உள்ளது. அனுபவம் அதிகரிக்கும்போது சம்பளமும் பதவியும் கணிசமாக உயரும். இதற்குத் துணைத் துறைகளாகக் கப்பல் கட்டுமானம், பராமரிப்பு, துறைமுக மேலாண்மை, இடப்பெயர்ச்சி (லாஜிஸ்டிக்ஸ்), விநியோகச் சங்கிலி மேலாண்மை, கடல்சார் காப்பீடு, கடல்சார் சட்டம், சர்வதேச வர்த்தக மேலாண்மை போன்ற துறைகளிலும் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வரு கின்றன.

இந்தியாவில் தற்போது 12 முக்கியத் துறைமுகங்களும், 200க்கும் மேற்பட்ட சிறிய துறைமுகங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன்

மூலம் நிர்வாகம், பாதுகாப்பு, சரக்கு மேலாண்மை, போக்குவரத்து ஒருங்கிணைப்பு போன்ற பணிகளில் பட்டதாரிகளுக்கு நிலையான வேலை வாய்ப்புகள் உருவாகின்றன.

கடல்சார் துறையில் பணியாற்ற விரும் பும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் தேர்வு செய்வது அவசியம். மேலும் நல்ல உடல் தகுதி, ஆங்கில மொழி அறிவு, தொழில் நுட்பத் திறன்கள், உலக அளவில் பணியாற்றும் மனப்பாங்கு ஆகியவை இந்தத் துறையின் வெற்றிக்கு அடிப் படைக் காரணிகள்.

கடல்சார் துறை என்பது சவால்கள் நிறைந்தது என்றாலும் பாதுகாப்பான, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு சிறந்த தொழில் பாதை. இன்று எடுக்கப்படும் சரியான கல்வித் தேர்வே நாளைய வெற்றிகரமான வாழ்க்கைக்கு உறுதியான அடித்தளமாக அமையும்.

- கட்டுரையாளர், டி. ராஜசேகர், சென்னை அமெட் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார்

கடல்சார் துறையின் சர்வதேச வாய்ப்புகள் | களம் புதிது
அரசுப் பணியாளர் தேர்வு ரத்து: தேவை நிரந்தரத் தீர்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in