Last Updated : 07 Jun, 2022 07:45 AM

 

Published : 07 Jun 2022 07:45 AM
Last Updated : 07 Jun 2022 07:45 AM

சேதி தெரியுமா?

மே 27: நாடு முழுவதும் 2020இல் 3,66,138 சாலை விபத்துகளில் 1,20,806 பேர் பலியாகினர். இதில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 45,484 விபத்துகள் நடைபெற்றதாக மத்தியத் தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

மே 28: சென்னையில் தமிழக அரசு சார்பில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் சிலையைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்து வைத்தார்.

மே 28: தமிழகத்தில் ஆண்டுக்கு ஆறு முறை கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கான உத்தரவைத் தமிழக அரசு வெளியிட்டது. இதன்படி புதிதாக மார்ச் 22இல் உலகத் தண்ணீர் நாளிலும் நவம்பர் 1இல் உள்ளாட்சி நாளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

மே 29: இலக்கியத்துக்காக வழங்கப்படும் புகழ்பெற்ற ‘புக்கர்’ பரிசு இந்த ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த இந்தி நாவலாசிரியை கீதாஞ்சலிஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டது.

மே 29: அகமதாபாத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.

மே 30: நாட்டில் சோதனை முயற்சியாக குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் இந்திய அஞ்சல் துறை மருந்து பார்சல் விநியோகத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டியது.

ஜூன் 1: இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் மூன்றாமிடத்துக்கான போட்டியில் ஜப்பானை 1-0 என்கிற கோல் கணக்கில் தோற்கடித்து இந்தியா வெண்கலம் வென்றது.

ஜூன் 3: தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், ராஜேஸ்குமார், கிரிராஜன்; அதிமுக சார்பில் சி.வி. சண்முகம், ஆர். தர்மர்; காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x