

இன்றளவும் களிமண் செங்கற்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிடிவாதத்துடன் இருப்பவர்கள் அதிகம். கட்டிடத்துக்கு உறுதி என்ற வகைப்பாட்டில் களிமண் செங்கற்கள் மக்கள் மனதை ஆக்கிரமித்துள்ளன. ஆனால், களிமண் செங்கலுக்கு மாற்றாக பல்வேறு கட்டுமானப் பொருட்கள் இன்று வந்துவிட்டன.
அதில் ஒன்றுதான் சாம்பல் செங்கல் அதாவது ஃப்ளை ஆஷ் பிரிக்’. நீடித்த உழைப்பு, சிறந்த வெப்பக்காப்பு இவற்றுக்காக இந்த கற்களை இன்று பயன்படுத்துவோர் அதிகம். அனல் மின்நிலைய நிலக்கரி சாம்பல் - 60-65 சதவீதம், மணல் அல்லது கல் தூள் 20-25 சதவீதம், சுண்ணாம்பு 8-12 சதவீதம், ஜிப்சம் 5 சதவீதம், பயன்படுத்தி இக்கற்கள் தயாரிக்கப்படுகின்றன.
சில நேரங்களில் நீரேற்றப்பட்ட சுண்ணாம்பு மற்றும் ஜிப்சத்துக்கு பதில் போர்ட்லேண்ட் சிமென்ட்டும் பயன்படுத்தப்படுகிறது. செங்கல் தயாரிக்கப்பட்ட பின், இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு நீரில் பதப்படுத்தப்படுகின்றன.