Last Updated : 31 Mar, 2018 10:58 AM

 

Published : 31 Mar 2018 10:58 AM
Last Updated : 31 Mar 2018 10:58 AM

ஈஸ்டர் பண்டிகை சிறப்பு அலங்காரங்கள்

கி

றிஸ்தவர்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர். கிறிஸ்து இறப்பிலிருந்து மீண்ட நாளாக ஈஸ்டர் கருதப்படுகிறது. ஈஸ்டர் தினத்தன்று முட்டை மறைத்து வைக்கப்பட்டு பரிசாக வழங்கப்படும். பேகன் மற்றும் அரேபியன் சூரிய பண்டிகைகளை உள்ளடக்கியதே ஈஸ்டர். பேகன் நம்பிக்கையில் மறுபிறப்புக்கு அடையாளம் முட்டை. எனவே, ஈஸ்டர் பண்டிகை முட்டையை மையமாக வைத்துக் கொண்டாடப்படுகிறது. அதன்பிறகு ஈஸ்டர் முயல், ஜெல்லி பீன்கள் எனப் பலவகைகள் இந்தக் கொண்டாட்டத்தில் முக்கியமானது. பண்டிகையன்று வீட்டை அலங்கரிப்பது அனைவரது வழக்கம். அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையன்று வீட்டை அலங்கரிக்கச் சில முறைகள்:

பலூன் முட்டை:

வீட்டில் ஏதேனும் விருந்து, பிறந்தநாள் கொண்டாட்டம் போன்றவற்றுக்கு அலங்கரிக்க வேண்டும் என்றாலே பலூன்தான் முதலில் வாங்குவோம். பலூன் இல்லாத கொண்டாட்ட அலங்காரங்களே இருக்காது என்றுகூடக் கூறலாம். அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகைக்கும் பலூன் முக்கியமான அலங்காரப் பொருள். பலூனை ஊதி அடிப்பகுதியில் கட்டினால் பார்ப்பதற்கு முட்டை போலவே இருக்கும். இதில் குவில்லிங் பேப்பர்களைப் பயன்படுத்தி அலங்கரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: பலூன், குவில்லிங் பேப்பர், கத்திரிக்கோல், பசை.

முதலில் கலர் கலரான குவில்லிங் பேப்பரை நுனி வரை வெட்டிக்கொள்ளுங்கள். சிறு சிறு இடைவேளி விட்டு வெட்டி வையுங்கள். தேவையான அனைத்து கலர்களையும் வெட்டி வைத்துவிட்டு, பலூன்களை ஊதி முட்டைபோல் கட்டி வைக்கவும். பிறகு பேப்பரில் பசை தடவி பலூனின் சுற்றுப்புறத்தில் ஒட்ட வேண்டும். இதேபோல் பலூன் முழுவதும் ஓட்டினால் அழகாக இருக்கும். பலூனைச் சுவரில் ஒட்டலாம் அல்லது தொங்கவிடலாம்.

பேப்பர் முட்டை:

பரிசுகள் கொடுத்தால் அதில் உள்ள கிப்ட் ராப்பர்களைத் தூக்கிப் போட்டுவிடாமல் சேர்த்து வைக்கும் பழக்கம் சிலருக்கு மட்டுமே உண்டு. அப்படிச் சேர்த்து வைப்பவர்களாக இருந்தால் இந்த பேப்பர் முட்டை உடனடியாக ரெடி. கிப்ட் பேப்பர்களை முட்டை வடிவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அட்டைப் பெட்டி அல்லது கார்ட் போர்ட் பெட்டி ஒன்றை எடுத்து அதில் முட்டை வடிவத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். கிப்ட் பேப்பரை அட்டையில் ஒட்டி உலர வையுங்கள். பிறகு தனித் தனி முட்டைகளைக் கயிற்றில் கோத்துத் தொங்கவிடலாம் அல்லது, வெறும் முட்டைகளைச் சுவரில், குளிர்சாதனப்பெட்டி, கதவுகள் போன்றவற்றில் ஆங்காங்கே ஒட்டினாலும் அழகாக இருக்கும்.

தேவையான பொருட்கள் : கிப்ட் பேப்பர், அட்டைப் பெட்டி, கயிறு, பசை

துணி பண்ணி :

ஈஸ்டர் அன்று முட்டைகளை ஒழித்து வைத்து குழந்தைகளுக்கு முயல் (ஈஸ்டர் பண்ணி) வழங்கும் என ஒரு கதை இருக்கிறது. அதன்படி முயல் வடிவங்களும், முயல் பொம்மைகளும் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஈஸ்டர் பண்ணியைத் தேவையில்லாத கிழிந்த உடைகள், துணிகள் ஆகியவற்றை வைத்து உருவாக்கலாம். கிழிந்த துணி அல்லது சிறு சிறு தேவையில்லாத துணிகள் இருந்தால் அவை அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

துணிகளை மிகச் சிறிய சதுரங்களாக வெட்ட வேண்டும். சதுரமாக வெட்டிய துணிகளின் மையத்தில் ஒரு நூல் வைத்து கட்டி “போ (Bow)" போன்று மாற்ற வேண்டும். இவற்றைப் பசை கொண்டு ஒட்டியோ ஊசி நூல் வைத்து தைத்தோ ஒரு பெரிய வட்டம், ஒரு சிறிய வட்டம் மற்றும் இரண்டு முயல் காது வடிவங்களை உருவாக்குங்கள். பிறகு முயல் வடிவத்தில் எங்கு வேண்டுமானலும் ஒட்டிக்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: துணி , ஊசி நூல், ஃபேப்ரிக் க்ளூ, சாட்டின் ரிப்பன்

ஜெல்லி பீன் மரம்:

ஜெல்லி பீன் சாப்பிட்டால் மறுபிறப்பு எடுக்கலாம் எனப் பல ஃபேண்டலி வருவதுண்டு. கலர் கலராக இருக்கும் இந்த ஜெல்லி பீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதன் சுவை பற்றிக் கூறவே தேவையில்லை. அவ்வளவு அழகாக இருக்கும். கிறிஸ்துமஸ் மரம் போல் ஈஸ்டர் அன்று ஜெல்லி பீன்களை வைத்து உருவாக்கும் செயற்கை மரத்தை வீட்டில் அழகுக்கு வைக்கலாம்.

தேவையான பொருட்கள்: கம்பி, பூந்தொட்டி அல்லது பாட்டில், மண், ஜெல்லி பீன்

ஒரு பூந்தொட்டியில் அல்லது பாட்டிலில் மண் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். மெல்லிய கம்பிகளை வைத்து மரக்கிளைகளை உருவாக்க வேண்டும். மரத்தின் அடிப்பகுதி மற்றும் நடுப்பகுதி 4 அல்லது 5 நீளக் கம்பியை முறுக்கி திடமாக நிற்கும் அளவுக்குச் செய்ய வேண்டும். பின்பு , ஒவ்வொரு கிளையையும் அதனுடன் இணைக்க வேண்டும். கிளைகளை இனணத்த பிறகு ஜெல்லி பீன்களை கிளையின் நுனியில் பொருத்த வேண்டும் . கயிற்றால் கட்டியோ கிரீம் தடவியோ வைக்கலாம். இதுபோன்று கிளை முழுவதும் ஜெல்லி பீன்களை வைத்தாலும் பார்க்க அழகாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x