Published : 28 Feb 2018 04:31 PM
Last Updated : 28 Feb 2018 04:31 PM

சொத்து வரி: நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை

வீடோ நிலமோ, வாங்கிய பின் அந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை! ஆனால் சொத்து வாங்குவதை சார்ந்த அதிகாரத்துவ அமைப்பு அந்த சந்தோஷத்தை நிலைக்க விடுவதில்லை. வீடு வாங்குவதற்கான செயல்முறை நீண்டதாகும். அதற்கான ஆவணங்கள் சரி பார்த்து பதிவை முடிப்பது இந்த செயல்முறையை நீட்டிக்க ஒரு காரணம்.

சட்ட ரீதியாக முடிக்கப்பட வேண்டிய ஆவணங்களில் சொத்து  வரி குறிப்பேடுகளை முடிப்பதென்பது மிகப் பெரிய சவால். வீடு வாங்குபவர்கள் விற்பனை பத்திரம் அல்லது கட்டா சான்றிதழ் பற்றி கேள்விபட்டிருப்பார்கள், ஆனால் சொத்து வரி ஆவணங்களிலும் பெயர் மாற்றம் செய்வது அவசியம்.

நகராட்சி அலுவலர்களால் பராமரிக்கப்படும் சொத்து வரி பதிவுகளில் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்படாவிட்டால், ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரிலேயே வழங்கப்படும்.  இது பெரிய விஷயமாக தெரியாவிட்டாலும், வரி செலுத்தாவிட்டால் அதிக அபராதம் மட்டுமின்றி சங்கடமான சூழ்நிலையையும் உருவாக்கும்.  மிக முக்கியமான சொத்து வரி ஆவணங்களில் உங்களின் பெயரை மாற்றிக் கொள்ளும் பொழுது சரிபார்த்துக் கொள்ளவேண்டியவையை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

ஒப்புதல் செயல்முறை

அரசு ஆவணங்கள் என்றாலே நமக்கு ஒரு வித கலக்கம் இருக்கும். நம்மிடம் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால், சொத்து வரி ஆவணம் வாங்குவது மிக எளிதானது. பெயர் மாற்றத்திற்கு, கீழ்கண்ட ஆவணங்கள் முக்கியம்:

  1. கடைசியாக கட்டிய வரியின் ரசீது
  2. விற்பனை பரிவர்த்தனை பத்திரத்தின் சான்ற்ளிக்கப்பட்ட நகல்
  3. ஹௌசிங் சொசைடீயிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ்
  4. கையொப்பமிட்ட பூர்த்தி செயப்பட்ட விண்ணபம்

இந்த அனைத்து ஆவணங்களையும் வருவாய் ஆணையரிடம் சமர்பிக்க வேண்டும். ஆவணம் மீதான ஒப்புதல் பெற பதினைந்து முதல் முப்பது நாட்கள் ஆகும்.

சொத்து மாற்றியமைத்தல்

சொத்து மாற்றியமைத்தல் மூலம் வரியை புதிய உரிமையாளரிடம் அரசு பெறும். பரம்பரை சொத்தோ அல்லது வாங்கப்பட்ட சொத்தோ எதுவாகினும் சொத்தின் மீதான உரிமையை நிலைநாட்ட இந்த மாற்றியமைத்தல் அவசியம். இந்த முறையின் படி நீதித் துறை முத்திரையோடு விண்ணப்பம் சமர்பித்தல் வேண்டும். சொத்து பற்றிய விவரங்கள் அடங்கிய இந்த விண்ணப்பத்தை பகுதி தாஷில்தாரிடம் சம்ர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த முறை வேறுபட்டாலும், ஆட்சேபனையில்லா சான்றிதழ் முக்கியமானது. முந்தைய உரிமையாளர் காலமாகிவிட்டால் இறப்பு சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும்.

தவிர்க்க முடியாத ஈவில் என்று வரியை பற்றி கூறுவர். நமது விருப்பதிற்கு அப்பாற்பட்டு அரசாங்க மற்றும் சட்ட விதிமுறைகளை கடைபிடித்தால் பின்னாளில் பல சிக்கல்களை தவிர்க்க உதவும். சொத்து என்று வரும் பொழுது அதை பற்றி கொஞ்சம் அறிந்திருத்தல் கூட உதவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x