தடகளத் தங்கம்! - சாதித்த வித்யாவின் சிறப்புப் பேட்டி | களம் புதிது

தடகளத் தங்கம்! - சாதித்த வித்யாவின் சிறப்புப் பேட்டி | களம் புதிது
Updated on: 
2 min read

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் தங்க மகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ். தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களுடன் நாடு திரும்பி இருக்கும் அவர், தனது பதக்கங்களைப் பெண்களுக்கு அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“விளையாட்டில் இந்தியப் பெண்கள் அதிகப் பதக்கங்களை வென்று வருகிறார்கள். எங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதையே இது காட்டுகிறது” என்கிறார் இந்த சாதனைப் பெண்மணி.

நேரமும் பயிற்சியும்: ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், கலப்பு 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் வித்யா இடம்பெற்றிருந்தார். வெள்ளியோடு தொடங்கிய அவரது பதக்க வேட்டை, மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெண்கலமாகத் தொடர்ந்தது. அதைவிட முக்கியமாக, பி.டி. உஷாவின் 42 ஆண்டு காலத் தேசியச் சாதனையை முறியடித்து, 54.75 விநாடிகளில் பந்தய தொலைவை நிறைவுசெய்து அசத்தினார் வித்யா.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் ஓடி உஷாவின் சாதனையைச் சமன் செய்திருந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே சாதனையை வித்யா முறியடித்திருக்கிறார். 0.67 விநாடிகள் என்பது சிறிய இடைவெளியாகத் தெரிந்தாலும், இந்த முன்னேற்றத்துக்குப் பின்னால் வித்யாவின் பல ஆண்டு கால உழைப்பு உள்ளது. இதில் அவரின் பயிற்சியாளர் நேபால் சிங் ரத்தோரின் பங்கும் அளப்பரியது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in