நூல் கொடுத்த தோழிகள்! | வாசிப்பை நேசிப்போம்

நூல் கொடுத்த தோழிகள்! | வாசிப்பை நேசிப்போம்
Updated on: 
1 min read

கல்லூரி விடுதி அறைத் தோழிகள் கொடுத்த பரிசுதான் வாசிப்புப் பழக்கம். நான் அரசு உதவிபெறும் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். பள்ளிப் படிப்புவரை வீட்டைப் பிரிந்து ஒருநாளும் நான் இருந்ததே இல்லை.

கல்லூரியில் சேர்ந்தபோதுதான் விடுதியில் தங்கிக் கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நிலை. கல்லூரியில் சேர்ந்த புதிதில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அண்ணனைப் பிரிந்த ஏக்கம், பழக்கப்படாத சக மாணவிகள், கல்லூரியின் புதுவிதமான சூழல் என ஒருவித அச்ச உணர்வும் குழப்பமும் என்னுள் ஏற்பட்டன. படிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை.

Loading content, please wait...

X