

நீங்கள் அரசியலில் தலையிடா விட்டாலும், அரசியல் உங்கள் வாழ்க்கையில் கட்டாயம் தலையிடும் – லெனின்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்பும் முதன்மைப் பேசுபொருளாக இருப்பவர்கள் பெண்கள். பெண்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்றும் பெண்கள் அரசியல் பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும் இருவேறு குரல்கள் ஒலிக்கின்றன.
1951இல் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் மொத்தமிருந்த 17 கோடி வாக்காளர்களில் 8 கோடிப் பேர் பெண்கள். இந்திய விடுதலைப் போராட்டம் முதற்கொண்டு சமூகச் சீர்திருத்தங்கள், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை, பேறுகால விடுமுறை உள்ளிட்ட பல உரிமைகளும் எண்ணற்ற பெண்கள், அரசியல் இயக்கங்களிலும் கட்சிகளிலும் தங்களை இணைத்துக்கொண்டு போராடியதன் விளைவாகக் கிடைத்தவை. இன்று நமக்கிருக்கும் இந்தக் குறைந்தபட்ச கருத்துரிமைச் சுதந்திரம் உள்பட இப்படிப் பெறப்பட்டவைதான்.