விடாமல் சமையல் பழகும் வேதாளம் நான்! | ஆண்கள் ஸ்பெஷல்

விடாமல் சமையல் பழகும் வேதாளம் நான்! | ஆண்கள் ஸ்பெஷல்
Updated on: 
1 min read

என் வீட்டுத் தரையில் எல்லா இடங்களிலும் என் பாதம் பட்டிருக்குமா என்பது சந்தேகமே. நேரம், காலம் பார்க்காமல் விடுமுறை, பண்டிகை நாள்களிலும்கூட அலுவலக வேலையில் மூழ்கிக் கிடக்கும் இயல்பு, சூழல் என்னுடையது.

திருமணமான நாளிலிருந்து சமையல், வீட்டுவேலை, குழந்தைகளின் கல்வி, பயிற்சி வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, பள்ளி நிகழ்வுகளில் பங்கெடுப்பது, மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்வது, என் உறவு - நட்பு வட்டங்களையும் அரவணைத்துச் செல்வது என்று அனைத்தையும் என் மனைவியே பார்த்துக்கொண்டார்.

கூடுதலாக என் மறதி, நான் தவறவிடும் பொருள்கள் உள்ளிட்டவற்றையும் அவரே சரிசெய்ய வேண்டியிருந்தது. இந்நிலையில் முதுகலை சட்டம் படிக்க அவர் இரண்டு ஆண்டுகள் நேரடி வகுப்புக்கு மதியத்தில் செல்ல வேண்டியிருந்தது.

மாலை 3 மணிக்குப் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளைப் பயிற்சி வகுப்புக்கு விடவேண்டிய பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

அப்போது அவர்களுக்குக் கடையில் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து வந்தேன். சில நாள்கள் கழித்து நானே சமைத்துக் கொடுக்கத் தொடங்கினேன். கல்லூரி முடிந்து என் மனைவி வீட்டுக்கு வந்ததும், “இது குடிக்கும் நீர்.

Loading content, please wait...

X