வரலாற்று வெற்றி! | பெண்கள் 360

வரலாற்று வெற்றி! | பெண்கள் 360
Updated on: 
1 min read

பெண்கள் பல துறைகளில் தடம்பதித்தபோதிலும், இன்னும் பல இடங்களில் ‘முதல் பெண்’ என்கிற அடைமொழி இடவேண்டிய நிலையில்தான் உலகம் இருக்கிறது. அந்த வகையில் அமெரிக்க அரசியல் வரலாற்றில் புதிய மைல்கல்லைத் தொட்டுள்ளார் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ்.

அண்மையில் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜார்ஜியா மாகாணத்தின் ஆளுநராக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

250 ஆண்டு கால வரலாற்றில் ஒரு மாகாணத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்ரிக்கப் பெண் என்கிற பெருமையை கீஷா லான்ஸ் பெற்றுள்ளார்.

Loading content, please wait...

X