பெண்களுக்கு எதிரான குற்றங்கள் | பெண்கள் 360

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் | பெண்கள் 360
Updated on
1 min read

இந்தியாவில் 2024ஆம் ஆண்டு நிலவரப்படி 5,737 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவு என்கிறபோதும் இந்தியாவில் நாள்தோறும் 16 பெண்கள் வரதட்சணை காரணமாகக் கொல்லப்படுகிறார்கள் அல்லது தற்கொலைக்குத் தூண்டப்படுகிறார்கள் என்பது புறக்கணிக்கக்கூடியது அல்ல. பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் வரதட்சணை மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன. 2024ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி மூன்றில் ஒரு பங்கு வரதட்சணை மரணங்கள் (2,038) உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ளன.

அதற்கு அடுத்த இடத்தை பிஹாரும் (1,078) மத்தியப் பிரதேசமும் (450) பிடித்துள்ளன. வரதட்சணை வழக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் முடிக்கப்படுவதில்லை. கடந்த பத்து ஆண்டுகளாக மூன்றில் ஒரு வழக்கு காவல் நிலைய விசாரணை நிலையிலேயே இருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in