கல்லீரல் புற்றுநோய் | நலம் அறிவோம்

கல்லீரல் புற்றுநோய் | நலம் அறிவோம்
Updated on
1 min read

மனிதனின் உடலில் உள்ள சிக்கலான உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது, உடலில் ஐநூறுக்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது.

கொழுப்பு, புரதத்தைச் செரிமானம் செய்வது, நச்சுகளை அகற்றுவது, பித்த சுரப்பு, ரத்தச் சர்க்கரையின் அளவை ஒழுங்குபடுத்துவது போன்ற முக்கியப் பணிகளைச் செய்கிறது. கல்லீரலில் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

கல்லீரலில் ஏற்படும் புற்றுக் கட்டி மிகவும் ஆபத்தானது. கல்லீரல் தீவிரமாகப் பாதிக்கப்படும்வரை அறிகுறிகள் வெளியே தெரியாது. என்றாலும் சில அறிகுறிகளை வைத்து கல்லீரல் புற்றுநோயை அறிந்துகொள்ள முடியும்.

விலா எலும்புகளுக்குக் கீழே வலது பக்கத்தில் கட்டி, வயிற்றின் மேல் வலது பகுதியில் சங்கடமாக இருப்பது, வயிற்று வீக்கம், வலது தோள்பட்டை அருகே அல்லது பின்புறத்தில் வலி, மஞ்சள் காமாலையால் தோல், கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சள் நிறமாக மாறுவது, லேசாக அடிபட்டாலும் சிராய்ப்பு அல்லது ரத்தப்போக்கு ஏற்படுவது, வழக்கத்துக்கு மாறான சோர்வு, பலவீனமாக உணர்வது, குமட்டல், வாந்தி, பசியின்மை ஏற்படுவது அல்லது சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவது, காரணமே இல்லாமல் உடல் எடை குறைவது, நிறமற்ற மலம், சிறுநீரின் நிறம் அடர்த்தியாக மாறுவது, காய்ச்சல் வருவது போன்றவை கல்லீரல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக அமெரிக்கத் தேசிய புற்று நோய் நிறுவனத்தின் தரவுகள் தெரி விக்கின்றன.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

கல்லீரல் புற்றுநோய் | நலம் அறிவோம்
எப்போதாவது மது குடிப்பதும் தவறா ? | மறையாத கட்டுக்கதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in