எப்போதாவது மது குடிப்பதும் தவறா ? | மறையாத கட்டுக்கதைகள் 21

எப்போதாவது மது குடிப்பதும் தவறா ? | மறையாத கட்டுக்கதைகள் 21
Updated on
3 min read

மதுவை அளவுடன் பருகினால் இதயத்துக்கும் உடல்நலனுக்கும் நல்லது என்கிற கற்பிதம் சமூகத்தில் நிலவுகிறது. இதை நம்பி, பலரும் அவ்வப்போது அளவாக மது அருந்தவும் செய்கின்றனர்.

புற்றுநோய்க் காரணிகள்

இருபதாம் நூற்றாண்டில் ஒப்பீட்டளவில் தரம் குறைவான, கண் காணிப்பு சார்ந்த ஆய்வுகளின்படி (Observational studies) குறைவான அளவு மது அருந்துவது இதயத்துக்கு நல்லது என்பது போன்ற கருத்து வெளிப்பட்டது. எனினும், 21ஆம் நூற்றாண்டில் RCT (Randomised controlled trials) எனும் தரமான ஆய்வுகளில் மதுவுக்கும் இதய நலனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி யானது.

மாறாக, எவ்வளவு குறைவாக மது அருந்தினாலும் மார்பகம், குடல், உணவுக் குழாய் சார்ந்த புற்றுநோய் ஏற்படவும் கல்லீரல் நோய், உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படவும் சாத்தியம் அதிகரிக்கிறது என்கின்றன ஆய்வுகள். தற்கால மருத்துவ அறிவியல்படி, எவ்வளவு குறைவான அளவு மது அருந்தினாலும், அது பாதுகாப்பு இல்லை.

மதுவில் இருக்கும் எத்தனால் எனும் ஆல்கஹால், குரூப் -1 கார்சினோஜென் (புற்றுநோய்க்காரணி) ஆகியவை பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளில் அடையாளம் காணப்பட் டுள்ளன. மது அருந்தாதவர்களைவிட மதுவை அருந்துபவர்களுக்குப் பல்வேறு வகையான புற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரிப்பதும் உண்மையே. இன்னும் பலர், எப்போதாவது மது அருந்தினால் பிரச்சினை இல்லை, அது பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைக்கின்றனர். அந்த எண்ணமும் தவறு.

எப்போதாவது குடிக்கலாமா?

எப்போதாவது மது அருந்துவோர் அதிகமாக மதுவை அருந்தும் போக்கு உள்ளது. இதற்கு ‘Binge Drinking’ என்று பெயர். குறுகிய நேரத் தில் ரத்தத்தில் அதிகமான அளவு ஆல்கஹால் சேரும்போது, கல்லீரல் ஸ்தம்பித்துவிடும். ஆல்கஹாலை வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்தி அதைக் கிரகிக்கும் தன்மை கல்லீரலுக்கு மட்டுமே இருக்கிறது. எனினும் அளவுக்கு மிஞ்சி மது அருந்தும்போது கல்லீரலுக்குக் கூடுதல் சுமையாகிறது.

சிறுநீரகங்க ளாலும் குறிப்பிட்ட அளவு ஆல்க ஹாலை மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் வெளியேற்ற முடியும். குறுகிய நேரத்தில் அதிக அளவு ஆல்கஹால் ரத்தத்தில் கூடும்போது, இதயம் சீர்கெட்டுத் துடிக்கவும், ரத்த அழுத்தம் உயரவும் வாய்ப்புள்ளது. இதனால், இதய ரத்தநாள அடைப்பு, பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் கூடுகிறது.

தொடக்கத்தில் ஒருவர் 90 மி.லி. அளவு மது அருந்தினால் கிடைக்கும் போதை நாளடைவில் கிடைக்காமல் போகும். போதை கிடைக்க மதுவின் அளவை 180 மி.லி., 360 மி.லி. என்று உயர்த்திக்கொண்டே செல்வார். இதுதான் மது விரிக்கும் மாயவலை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in