

சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை ரத்தக் குழாய் அடைப்பு (வாத) ஆகிய நோய்கள் வருவதற்கான சாத்தியம் அதிகம். எனவே, சிறுநீரக நோயாளர்கள் இதயத்தையும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்குச் சில வழிகள்:
உணவில் தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்குப் பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். சிறுநீரக மருத்துவரின் பரிந்துரைப்படி உண்ண வேண்டும்.
* எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், இறைச்சிக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும்.
*உணவில் பூண்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்சி டன்ட் அதிகமுள்ள கேரட், புரோக்கலி, மக்காச்சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.
* பொதுவாக ஒருவருக்கு ஒரு நாளைக்கு 4 கிராம் உப்பு போதும். கடுமையான சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி உப்பைத் தவிர்க்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டி இருக்கும்.