வயிற்றைப் பாதுகாக்கும் ஓமத் திரவம் | நலம் அறிவோம்

வயிற்றைப் பாதுகாக்கும் ஓமத் திரவம் | நலம் அறிவோம்
Updated on: 
1 min read

ஓமத் திரவம், ஓம வாட்டர் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? முந்தைய தலைமுறைக்குத் தெரியும். இதை ஓமத் தீநீர் என்றும் சொல்வார்கள்.

முன்பெல்லாம் விருந்து நிகழ்ச்சி களிலோ, திருமண விழாக்களிலோ அதிகமாகச் சாப்பிட்டால், ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய இந்தத் தண்ணீரை மக்கள் நாடுவார்கள். குழந்தை களுக்கு வயிறு சரியில்லை என்றாலும், முதலில் ஓமத் திரவத்தைத்தான் அம்மாக்கள் தருவார்கள். காரமும் கசப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். ஆனாலும், வாயில் ஊற்றிவிடுவார்கள்.

இன்று பெரிய விருந்துகளும், இரவு உணவுக் கலாச்சாரமும் பெருகிவிட்ட நிலையில் ஓமத் திரவத்தின் பயன்பாடு அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், கால மாற்றத்தில் தற்போது பெருகிவிட்ட விருந்து கலாச்சார உலகிலும் ஓமத் திரவத்தின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

ஓமத் திரவத்தை வீட்டிலேயே தயார் செய்துவிடலாம். ஓமத்தை இடித்துக் கொள்ள வேண்டும். அதைத் தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு காய்ச்சி வடிக்கும் இயந்திரத்தில் இட்டுச் சிறு தீயில் எரிக்க, நீராவி வரும். பின் நீராவியைக் குளிர்விக்கும்போது இயந்திரத்திலிருந்து சொட்டுச் சொட் டாகத் தண்ணீர் இறங்கும். சேகரித்த அந்தத் தண்ணீர் காரம் மிக்கதாக இருக்கும். அதுதான் இந்தத் தண்ணீரின் சிறப்பு. இதை அப்படியே பருகாமல் 15 மி.லி. ஓமத் திரவத்தை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து பருகுவதே நல்லது.

வயிற்றைப் பாதுகாக்கும் ஓமத் திரவம் | நலம் அறிவோம்
நாவுக்கான சுவையா? ஆரோக்கியத்துக்கான சுவையா? | ருசிக்கும் முன் யோசி 1

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in