நாவுக்கான சுவையா? ஆரோக்கியத்துக்கான சுவையா? | ருசிக்கும் முன் யோசி 1

புதிய தொடர்
நாவுக்கான சுவையா? ஆரோக்கியத்துக்கான சுவையா? | ருசிக்கும் முன் யோசி 1
Updated on: 
2 min read

ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்கிட முடியுமா என்ன? - காலங்காலமாக முந்தைய தலைமுறைக்கு நாம் முன்வைத்த முக்கியக் கேள்வி. ஆனால், இப்போதைய ஜென் ஸீ உலகமோ, ‘ஆமாம் ஆமாம்.. கொஞ்சம் அதிக விலை கொடுத்தால் மட்டுமே சற்றேனும் வாங்க முடியும்’ என்று உரக்கச் சொல்கிறது.

இதுகுறித்து லான்செட் மருத்துவ இதழில் 2025 நவம்பரில் ஓர் அறிக்கை வெளியானது. அதில், மிக முக்கியமான பல மருத்துவத் தரவுகள், சக்கை உணவு வகைகளின் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் தீவிரப் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் (UPF) மீதான பெரிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டன.

ஓர் ஆய்வறிக்கை: சமச்சீரற்ற சக்கை உணவு வகைகளால் பெருகும் வாழ்க்கைமுறை சார்ந்த தொற்றா நோய்களின் (NCDs) உலகளாவியப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அந்த அறிக்கை தெள்ளத்தெளிவாகச் சுட்டிக்காட்டியது. உணவு உற்பத்தி, அதன் பகிர்வு, அதற்கான சந்தை ஆகியவற்றில் உள்ள அமைப்புசார் குறைபாடுகள், ஆரோக்கியமான உணவு வகைகளைப் பெறுவதில் நீடிக்கும் சமத்துவமின்மை (inequality) ஆகியவை இதற்கான முக்கியக் காரணிகளாக உள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டின் யுனிசெஃப் அறிக்கையானது ஊட்டச்சத்துக் குறை பாட்டால் மட்டுமே உடல் எடை குறைதல் (wasting), வளர்ச்சி குன்றுதல் (stunting), உடல் பருமன் (obesity) ஆகிய நோய் நிலைகளின் குறியீடுகள் உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டியது.

கூடவே இப்போது நடக்கும் உக்ரைன் - ரஷ்யப் போரும், அமெரிக்க - ஈரானியப் போரும் இந்த நோய்க் கூட்டத்தைக் கணிசமாக உயர்த்திவருகின்றன. கிட்டத்தட்ட இந்தப் பூமியில் வாழும் 260 கோடி பேர் ஆரோக்கியமான உணவை வாங்கும் அளவுக்கு வசதியற்றவர்கள் என்கிறது அந்த அறிக்கை.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in