விண்வெளி ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடலாமா? | டிங்குவிடம் கேளுங்கள்

விண்வெளி ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடலாமா? | டிங்குவிடம் கேளுங்கள்
Updated on
1 min read

விண்வெளி ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடுவது அவசியமா டிங்கு? - ஜி. இனியா, 10-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.

நல்ல கேள்வி இனியா. இதை நீங்கள் மட்டும் கேட்க வில்லை, உலகம் முழுவதுமே இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. விவாதிக்கப் படுகின்றன. வறுமை, சுகாதரமின்மை, காலநிலை நெருக்கடி போன்ற நிகழ்காலப் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, மனிதகுலத்தின் எதிர்கால நலனுக்காகச் செய்யப்படும் விண்வெளி ஆய்வுகளுக் கான நிதி அவசியமா என்று எல்லாருக்கும் தோன்றும்.

விண்வெளி ஆய்வுகள் மூலம்தான் இன்று நாம் பயன்படுத்தும் பல தொழில்நுட்பங்கள் கிடைத்திருக்கின்றன. செயற்கைக் கோள்கள் மூலம் ஜிபிஎஸ், வானிலை முன்னறிவிப்பு, புயல், வெள்ளம், காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களை முன்கூட்டியே கணித்து, லட்சக்கணக்கான மனித உயிர்களைக் காப்பாற்ற முடிகிறது.

பூமியில் வளங்கள் தீர்ந்துவரும் சூழலில் பிற வான் பொருள்களில் ஆற்றலுக்கான மூலப்பொருள்களைக் கண்டறிய விண்வெளி ஆய்வு அவசியம். எதிர்காலத்தில் விண்கற்களால் பூமிக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட இருந்தாலும் அவற்றைத் தொழில்நுட்பம் மூலம் தடுக்க விண்வெளி ஆய்வு அவசியம்.

அதனால் அறிவியலுக்குச் செலவு செய்வது அவசியம். அறிவியலுக்குச் செலவு செய்வதன் மூலம் தொழில்நுட்பத்தை மட்டும் உருவாக்கவில்லை, மனித வளத்தையும் உருவாக்கு கிறோம். அறிவியல் திட்டங்களால் பட்டதாரிகள், பொறியாளர்கள் உருவாகிறார்கள்.

அதோடு இந்தியா விண்வெளி ஆய்வுக்குக் குறைவான நிதியே ஒதுக்குகிறது. மற்ற நாடுகள் நம்மைவிட அதிகமாகவே நிதியை ஒதுக்குகின்றன. விண்வெளி ஆய்வுகளுக்கு இன்னும் கூடுதல் நிதி கொடுக்க வேண்டும் என்றே அறிவியலாளர்கள் கூறுகிறார்கள், இனியா.

விண்வெளி ஆய்வுகளுக்கு அதிக நிதி செலவிடலாமா? | டிங்குவிடம் கேளுங்கள்
மண் எவ்வாறு உருவாகிறது? | டிங்குவிடம் கேளுங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in