Last Updated : 09 Dec, 2015 11:41 AM

 

Published : 09 Dec 2015 11:41 AM
Last Updated : 09 Dec 2015 11:41 AM

மேஜிக் மேஜிக்: தானாக மேலே ஏறும் மோதிரம்

குழந்தைகளே இந்த வாரம், நூலின் மேல் தானாக ஊர்ந்து செல்லும் மோதிர மேஜிக்கைப் பார்ப்போம்.

என்னென்ன தேவை:

சிறிய நூல், மோதிரம்.

மேஜிக்:

# ஒரு மெல்லிய நூலின் நடுப் பகுதியில் மோதிரத்தை வைத்து, நூலின் இரண்டு முனைகளையும் பிடித்து நண்பர்களிடம் காட்ட வேண்டும்.

# ஒரு முனையைக் கீழே இறக்கிப் பிடித்தால், மோதிரமும் கீழே வந்துவிடும்.

# இப்போது, கண்களை மூடி மேஜிக் மந்திரம் சொல்ல வேண்டும்.

# இந்த முறை நூல் முனையைக் கீழே கொண்டுவந்தால், மோதிரம் கீழே விழாமல், தானாக மேல் நோக்கிச் செல்லும்.

மேஜிக் ரகசியம்:

# நீங்கள் நூலின் முனைகளை இரு கைகளிலும் பிடிக்கும்போது, உங்களது ஒரு கையில் மட்டும் கொஞ்சம் அதிகமான நூலைப் பிடித்து மறைத்துக்கொள்ளுங்கள்.

# இப்போது, அதிகமான நூலை வைத்திருக்கும் கையைக் கீழே கொண்டுவாருங்கள்.

# அப்படிச் செய்தவுடன், நடுவில் இருக்கும் மோதிரம், அந்தக் கையை நோக்கிக் கீழே வரும். ஆனால் அது கை விரல்களைத் தொடாதவாறு பிடித்துக்கொள்ள வேண்டும்.

# இப்போது, அதிகமாக இருக்கும் நூலை மெதுவாக விடுவித்து இன்னொரு கையால் யாருக்கும் தெரியாமல் இழுங்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக மோதிரத்தை மேலே கொண்டுசெல்லும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x