வேலையா, இன்ஃபுளூயன்சரா?

வேலையா, இன்ஃபுளூயன்சரா?
Updated on: 
1 min read

கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு முழுநேர இன்ஃபுளூயன்சராக மாற வேண்டுமென்பது பலரது கனவாகிவிட்ட காலம் இது.

ஆனால், சமூக ஊடகங்களில் பிரபலமாக இருந்துவிட்டு, கார்ப்பரேட் வாழ்க்கைக்கே திரும்பும் ஒரு இன்ஃபுளூயன்சரின் மனநிலை எப்படி இருக்கும்? இதைப் பகடி செய்து காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அமெரிக்க யூடியூபரான சாரா கூப்பர்.

அந்தக் காணொளியில் கார்ப்பரேட் பணியாளர் ஒருவரும் இன்ஃபுளூயன்சர் ஒருவரும் சந்தித்துப் பேசிக்கொள்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் (ஏ.ஐ.) வருகைக்குப் பிறகு அலுவலகச் சூழல் முன்பு இல்லாத அளவுக்கு மாறிவிட்டதாகக் கூறும் பணியாளர், ஏ.ஐ. மூலம் ஊழியர்கள் கண்காணிக்கப்படுவது குறித்தும் பேசுகிறார்.

Loading content, please wait...

X