‘உம்’மென்று இருக்கிறார்களா ஜென் ஸீ?

‘உம்’மென்று இருக்கிறார்களா ஜென் ஸீ?
Updated on
2 min read

இணையம் அறிமுகமான காலத்தில் தொடங்கி சாட்டிங், டேட்டிங் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கென்றே தனி அகராதிகள் உண்டு. இப்போது ஜென் ஸீ யுகம் அல்லவா! அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளும் இப்போது இணையத்தில் அதிகம் பகிரப்படுகின்றன, கவனிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் இன்று ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி அணுகுகிறார்கள் என்கிற ஆய்வுகளும்கூட வரத் தொடங்கிவிட்டன. அப்படி வந்த ஓர் ஆய்வு, ஜென் ஸீ தலைமுறையினரை ‘ஜென் ஸீ ஸ்டேர்’ (Gen Z Stare) என்று குறிப்பிடுகிறது. அதென்ன ‘ஜென் ஸீ ஸ்டேர்’?

என்ன சொல்கிறது ஆய்வு?

ஜென் ஸீ தலைமுறையினரைப் பொறுத்தவரை இது எதிர்மறையான விமர்சன வார்த்தை. அதாவது, ‘ஜென் ஸீ ஸ்டேர்’ என்றால், அவர்களிடம் ஏதாவது கேட்டால் அதற்குப் பதிலளிக்காமல் வெறித்துப் பார்ப்பது / பதில் பேசாமல் இருப்பது / அதைச் சட்டைச் செய்யாமல் இருப்பது என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.

இதைப் பற்றித்தான் அமெரிக்காவில் உள்ள ‘பெர்ஸ்பெக்டிவ் ஆன் சைக்கலாஜிகல் சயின்ஸ்’ என்கிற ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த ஆய்வின்படி மனிதர்கள் தினசரி பேசும் வார்த்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். 2005 – 2019 வரையிலான காலக்கட்டத்தில் மனிதர்கள் பேசும் வார்த்தைகள் 28 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. இதில் 2010க்குப் பிறகு திறன்பேசிகளின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது முக்கியக் காரணம்.

அதுவும் தற்போது 25 வயதுக்கு உள்பட்ட ஜென் ஸீ தலைமுறையினர் திறன்பேசியிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். இதற்கு எப்போதும் மனதை ஆக்கிரமித்து வைத்திருக்கும் குறுந்தகவல்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றோடு தொலைதூரத்தில் இருந்து வேலை பார்ப்பதும் காரணமாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கத்தால் ஜென் ஸீயினர் நேரில் பேசும் அவசியம் குறைந்துவிட்டதாக ஆய்வை நடத்திய நிபுணர்கள் கூறுகின்றனர். அதனாலேயே, எதற்கும் பதில் கூறாமல் இருக்கும் ‘ஜென் ஸீ ஸ்டேர்’ நிலைக்கும் ஆளாகியுள்ளனர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in