வலை விரிப்பது சுதந்திரமா, தந்திரமா? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 8

வலை விரிப்பது சுதந்திரமா, தந்திரமா? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை  8
Updated on: 
2 min read

வெகு நாள்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்த விஷயம் இது. டிஜிட்டல் உலகம் கடந்த சில ஆண்டுகளில் அசுர வளர்ச்சி கண்டிருக்கிறது. அதன் சாதக, பாதகங்களை இன்னும் முழுமையாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்பதே சந்தேகம்தான்! ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை என்பதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை.

அதேநேரத்தில், இருவரும் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒரே மாதிரியானவை அல்ல. ஒருவருடைய தட்டில் என்ன இருக்க வேண்டும், யாரைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும் என்பதெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட உரிமைதான். ஆனால், அந்தத் தனிப்பட்ட விருப்பங்களுக்குப் பின்னால் செயல்படும் வணிகத்தையும் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?

உடைப் பாகுபாடு

பெண்கள் தங்களுக்குப் பிடித்த உடையை அணிவதை நான் கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஆனால், காட்சி ஊடகங்களில் பெண்களின் உடல் மட்டும் ஏன் இவ்வளவு அதிகமாக முன்னிலைப் படுத்தப்படுகிறது என்கிற கேள்வி எனக்கு இருக்கிறது.

இந்திய சினிமாவில் காஷ்மீரில் படமாக்கப்படும் சில காதல் பாடல்களைக் கவனித்திருக்கிறீர்களா? கதாநாயகன் கோட், சூட் அணிந்து கம்பீரமாக நிற்பார். ஆனால், கதாநாயகியோ கடுமையான குளிரிலும் கோடைக்காலத்தில் அணியக்கூடிய மெல்லிய ஆடையில் காதல் செய்ய வேண்டியிருக்கும்! ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.

அந்த நடிகைக்கு எப்போது இந்த ஷாட் முடியும், எப்போது ஒரு போர்வையைப் போர்த்திக்கொள்ளலாம் என்கிற எண்ணம்தான் இருந்திருக்கும். குளிர் ஒன்றுதான். பாடலும் ஒன்றுதான்.

ஆனால், இருவருக்கும் ஏன் வெவ்வேறு உடை அளவுகோல்கள்? நடிகைகள் மீது கரிசனத்தை ஏற்படுத்துவதற்காக மட்டும் இதைக் கேட்கவில்லை. காலங்காலமாக நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் காட்சி அரசியலைப் புரிந்துகொள்ளவே இக்கேள்வி.

Loading content, please wait...

X