சித்தப்பாவும் மாமாவும் எங்கே போனார்கள், ப்ரோ? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 2

சித்தப்பாவும் மாமாவும் எங்கே போனார்கள், ப்ரோ? | ரீவைண்ட் முதல் ரீல்ஸ் வரை 2
Updated on: 
2 min read

அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணிடம், ‘நாத்தனார் என்கிற உறவைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அப்படியே உறைந்து போய்விட்டேன்! ஏனெனில், நாத்தனார் என்றால் யார் என்பதே அவருக்குத் தெரியவில்லை.

எதிரில் அமர்ந்திருந்த அவரின் கணவரிடமும் கேட்டேன். பாவத்த, அவருக்கும் தெரியவில்லை! பிறகுதான் அவர்கள் 2கே கிட்ஸ் என்பது தெரியவந்தது. இதனால், எல்லா 2கே கிட்ஸுக்கும் உறவுமுறைகள் தெரியாது என்று சொல்லவில்லை.

ஆனால், உறவுகளுக்கான இலக்கணத்தை நாம் வெகுவாக மாற்றிவிட்டோம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்றைய தலைமுறைக்கு உறவுமுறைகளின் பெயர்கள் தெரியவில்லை, உறவுகளின் மீது பற்றுதல் குறைந்துவிட்டது என்றால் அதற்கான முழுப் பொறுப்பையும் அவர்கள் மீது சுமத்திவிட முடியாது. சுமத்தவும் கூடாது. உறவுகளைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கத் தவறியது நாம்தான்.

எல்லாரும் ப்ரோ

இன்றைய தலைமுறையினருக்கு உறவு முறைகளில் இருக்கும் பெரிய சிக்கலே, வீட்டுக்கு வந்திருப்பவர் சித்தப்பாவா, மாமாவா என்பதுதான்! இந்தக் குழப்பத்தாலேயே சிலர் அறையைவிட்டு வெளியே வருவதில்லை. அப்படியே வந்தாலும், ‘நான் சித்தப்பா... என்னை மாமான்னு கூப்பிடுறியே!’ என்று நாலு பேர் முன்னால் அவர்களை அவமானப்படுத்திவிடுகிறோம்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in