

கணவன்/மனைவி, காதலன்/காதலியிடம் ‘5201314’ என்கிற எண்ணை கூகுளில் தேடச் சொல்லுங்கள். இந்த எண் சீன இணையத்தளங்களில் புழங்குபவை. இந்த எண்ணுக்கு கூகுள் தரும் பதிலால் உங்களுக்கு வெட்கப் புன்னகை பூக்கலாம்! கூகுளில் இந்த எண்ணைத் தேடிவிட்டு, புன்னகையுடன் தொடர்ந்து படியுங்கள்.
இனி ஐ லவ் யூ அல்ல!
‘5201314’ எண்ணில் 520 என்பது ‘ஐ லவ் யூ’ என்பதாகவும், 1314 என்பது ‘ஃபார் ஏ லைஃப்டைம்’ என்பதாகவும் அர்த்தம் சொல்லப்படுகிறது. அதாவது, தமிழில் ‘வாழ்நாள் முழுவதும் நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று பொருள்.
இந்த எண்களை சீனாவின் மாண்டரின் மொழியில் கூறும்போது ஏற்படும் ஒலி ஒற்றுமையின் அடிப்படையில் இதன் அர்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாகக் காதலைக் கூறும்போது, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று நேரடியாகக் கூறாமல், அதற்குப் பல்வேறு வழிகளை இளைய தலைமுறையினர் பின்பற்றுகிறார்கள்.