Published : 15 Oct 2019 02:45 PM
Last Updated : 15 Oct 2019 02:45 PM

அறிவியல் அலமாரி : காட்சிவழி கற்கலாம்

அறிவியலைக் காதலிப்போம்!

AsapSCIENCE:
http://bit.ly/AsapSci

அன்றாட வாழ்வில் மனிதர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கும் சுவாரசி யமான அறிவியல் காரணங்களை இரண்டு-மூன்று நிமிட அனிமேஷன் வீடியோக்களில் ஆங்கில சப்-டைட்டில்களுடன் விளக்குகிறது இந்த அலைவரிசை. கனடாவைச் சேர்ந்த மிச்செல் மோஃப்பிட், கிரேகோரி பிரவுன் என்கிற இரண்டு இளைஞர்கள் 2012-ல் இந்த அலைவரிசையைத் தொடங்கினார்கள். அவர்கள் வெளியிட்ட ‘சயின்ஸ் லவ்’, ‘பீரியாடிக் டேபிள்’ ஆகிய பாடல்கள் அறிவியல் காதலர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டவை.- கனி

கைகொடுக்கும் நுட்பம்

பெரிய திரையில் வாட்ஸ் அப்!

கணினியில் வாட்ஸ்அப் பார்ப்பதற்கு எளிமையான வழிமுறை: உங்கள் பிரௌசரில் https://web.whatsapp.com/ என்ற முகவரியைச் சொடுக்குங்கள். அதைத் தொடர்ந்து வரும் பக்கத்தில் ஒரு QR code தோன்றும். இப்போது மொபைல் வாட்ஸ்அப்பில், வலது மூலையின் உயரத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளைத் தொடுங்கள். அதில் மூன்றாவதாக இருக்கும் WhatsApp Web-ஐத் தொட்டால், Scan QR Code என்ற கட்டளையுடன் திரை QR code-ஐத் தேடும். இப்போது கணினியில் உள்ள QR code-ஐ மொபைல் மூலம் ஸ்கேன் செய்தால், வாட்ஸ்அப் கணக்கு கணினிக்குத் தாவிவிடும். இனி, கணினி வழியாகவே வாட்ஸ்அப் உலகை ஆளலாம். கைபேசியில் வாட்ஸ்அப் இணைப்பு துண்டிக்கப்படும்வரை கணினியில் வாட்ஸ்அப் இயங்கும்.- ரிஷி

செயலி புதிது

உடனுக்குடன் அறிவியல் செய்தி

Science News Daily:Fastest Science News App

அன்றாட அறிவியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் கைபேசி மூலமே தெரிந்துகொள்ள உதவுகிறது ‘சயின்ஸ் நியூஸ் டெய்லி' (Science News Daily) என்ற செயலி. தினமும் நூற்றுக்கணக்கான அறிவியல் செய்திகளை இந்தச் செயலியில் உடனுக்குடன் படிக்கலாம். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறிவியல் செய்திகள், கட்டுரைகள் இதில் படிக்கக் கிடைக்கின்றன. அறிவியலின் அனைத்துப் பிரிவுச் செய்திகளும் இந்தச் செயலியில் கிடைக்கும். அதேநேரம் தாங்கள் விரும்பும் அறிவியல் பிரிவு சார்ந்த செய்திகளைத் தேடுவதில் பயனர்கள் அதிக நேரம் செலவிடத் தேவையில்லை. ஒவ்வொருவரும் விருப்பத்துக்குரிய செய்திகளை உடனடியாகப் பெறும் வகையில் தகவமைத்துக்கொள்வதற்கான வசதி இந்தச் செயலியில் உண்டு.- நந்து

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x