Last Updated : 09 Sep, 2016 11:49 AM

 

Published : 09 Sep 2016 11:49 AM
Last Updated : 09 Sep 2016 11:49 AM

ஒரு நாயகன் உருவாகிறான்...

தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் டெல்லியைச் சேர்ந்த வருண் ப்ருதி, சமூக வலைதளங்களில் தான் நடித்து இயக்கிய ‘இன்ஸ்பயரிங்' வீடியோக்கள் மூலம் ‘ஸ்டார்' ஆகி வருகிறார்.

யார் இவர்?

பிறந்தது, வளர்ந்தது எல்லாமே டெல்லிதான். சினிமாவில் நடிக்க முயற்சி செய்தவர் அதற்காக கலிஃபோர்னியா சென்று நான்கு வருடங்கள் நடனம், நடிப்புக் கலை போன்றவற்றைக் கற்றார். ஹிப் ஹாப், ரோபோடிக், வேவிங் என பலவிதமான நடனங்கள் இவருக்கு அத்துப்படி.

விளம்பரங்கள், இசை வீடியோக்கள், குறும்படங்கள் என இவர் கைவைக்காத ஏரியாவே இல்ல. ‘ரிக்கி தி ஹேண்டிமேன்’, ‘சுகர்வீல்ஸ்’ போன்ற குறும்படங்களில் நடத்த இவருக்கு, 2014-ம் ஆண்டு ஷாருக் கான் நடித்து வெளிவந்த ‘ஹேப்பி நியூ இயர்' திரைப்படம் நல்ல ‘பிரேக்' ஆக அமைந்தது.

மனிதம் மலர...

இப்போது இவர் பாலிவுட் நடிகராக வலம் வந்தாலும், படங்களில் தலைகாட்டுவதை விட யூடியூப் வீடியோக்களில்தான் அதிகம் நடித்து வருகிறார்.

‘ப்ரிங்கிங் ஹியூமானிட்டி பேக்' என்ற இணையதளத்தை ஆரம்பித்து அதில் சமூகத்துக்கு மெஸேஜ் சொல்லும் வீடியோக்கள் பலவற்றைப் பதிவேற்றிவருகிறார். ரோட்டில் பிச்சையெடுக்கும் நபர்களுக்கு உதவுவது, பெண்கள் சீண்டப்படுவதைத் தட்டிக் கேட்பது, காதலில் தோல்வியடைந்தவர்களுக்கு அறிவுரை கூறுவது எனப் பல ரகங்களில் அந்த வீடியோக்கள் நம் உதட்டில் புன்னகையை வரவழைக்கின்றன. கடந்த நான்கு வருடங்களாக இந்த விஷயங்களைச் செய்துவருகிறார்.

‘ப்ரேவ் ஹார்ட்' என்ற தலைப்பில் இவர் செய்த ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலம். அந்த வீடியோவில் சாலையில் இரத்தக் காயங்களுடன் தான் அடிபட்டுக் கிடப்பதைப் போல நடித்திருந்தார். அப்போது இவரைப் பார்த்தவர்கள் எப்படி நடந்துகொண்டனர் என்பதை வீடியோ படமாக எடுத்து யூடியூப்பில் போஸ்ட் செய்தார். செம வைரலான இந்த வீடியோவை நிர்பயாவுக்குச் சமர்ப்பிப்பதாகச் சொல்லியிருந்தார்.

“மனிதர்களின் மனதில் மனித நேயத்தை வளர்க்க இதுபோன்ற வீடியோக்களை இயக்குகிறேன்” என்கிறார் வருண்.

இவரின் வீடியோக்களைப் பார்க்க: >http://bringinghumanityback.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x