திருச்சி பெற்ற பெரும் பாக்கியம்! | எம்.எஸ்.எஸ்.பாக்கியம் 100

திருச்சி பெற்ற பெரும் பாக்கியம்! | எம்.எஸ்.எஸ்.பாக்கியம் 100
Updated on
3 min read

எம்.கே.தியாகராஜ பாகவதர், திருச்சி லோகநாதன் என்று திருச்சிக்குப் பெருமை சேர்த்த திரைக்கலைஞர்கள் பலர். இந்த வரிசையில் இடம்பெற்றாலும் தமிழ் ரசிகர்களாலும் தமிழ்த் திரையுலகாலும் மறக்கப்பட்ட ஒரு நட்சத்திரம் எம்.எஸ்.எஸ்.பாக்கியம்.

‘நடிப்பிலும் நடனத்திலும் என்னைக் கவர்ந்த முன்னோடி’ என்று ஆச்சி மனோரமாவால் நெகிழ்ச்சியுடன் குறிப்பிடப்பட்ட எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ஐம்பதுகள் தொடங்கி எழுபதுகள் வரையிலும் நகைச்சுவை - குணச்சித்திர நடிப்பில் தரமான முத்திரைகளைப் பதித்தவர்.

திருச்சி- மணப்பாறை அருகே யுள்ள மருங்காபுரியில் பிறந்து வளர்ந்த ‘மருங்காபுரி செல்லம்மாள் சிவபாக்கியம்’ என்பதன் சுருக்கமே எம்.எஸ்.எஸ்.பாக்கியம். நாடக மேடையிலிருந்து இவர் திரையுலகில் அடியெடுத்து வைத்தபோது, தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக மாறிய எம்.ஜி.ஆர். என்கிற ‘மக்களின் நாயகன்’ பிறந்தார்.

பி.யூ.சின்னப்பாவுக்குப் பதிலாக..

டி.கே.எஸ்.சகோதரர்கள் நடத்தி வந்த ‘மேனகா’ நாடகத்தைத் திரைப்படமாக எடுத்து, ‘தமிழ் சினிமாவின் குறிப் பிடத்தக்க முதல் சமூகப் படம்’ என்று வரலாறு படைத்தவர்கள் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி நூற்றுக் கணக்கான தொழிலாளர் களுக்கு வாழ்வளித்த எஸ்.சோம சுந்தரமும் எஸ்.கே.மொய்தீனும்.

திராவிட இயக்க எழுத்தாளர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, கண்ணதாசன் ஆகியோரின் திரைப்பயணத்தில் இருவரும் ஓர் அத்தியாயமாகத் திகழ்ந்தனர். அதேபோல் ஜுபிடர்தான் எம்.ஜி.ஆரையும் ஓர் ஈர்ப்பான நாயகனாகக் காட்டியது. அந்தச் சுவாரசியத்தின் பின்னால், எம்.என்.நம்பியார் என்கிற வில்லன் உருவாகி வந்த கதையும் இருக்கிறது.

எம்.கே.டி - என்.எஸ்.கே இருவரும் கொலைக் குற்றச்சாட்டில் கைதான போது பத்துக்கும் அதிகமான திரைப் படத் தயாரிப்பாளர்கள் பதறியதாக அக்காலத்தின் சினிமா பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. எம்.கே.டியின் எல்லாப் படங்களிலும் என்.எஸ்.கே - மதுரம் தம்பதி நகைச்சுவைப் பகுதியில் உறுதியாக இடம்பெற்றனர். எம்.கே.டி யின் கால்ஷீட் வேண்டுமென்றால் என்.எஸ்.கே - மதுரம் தம்பதியின் கால்ஷீட்டும் தேவை.

அதுமட்டுமல்ல; எம்.கே.டி. சொல்பவரைத்தான் கதாநாயகி ஆக்க வேண்டும் என்கிற நிலையும் இருந்ததை ஜுபிடர் ஊழியர் எஸ்.கே.ஹபிபுல்லா சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நட்பில் பிரிக்க முடியாத இந்தக் கலைஞர்கள் கைதானபோது ஜுபிடரின் ‘முருகன்’, ‘வால்மீகி’ ஆகிய 2 படங்களில் நடிக்க எம்.கே.டி. ஒரு படத்துக்குத் தலா 60 ஆயிரம் ரூபாய் வீதம் முன்பணம் பெற்றிருந்தார். சூப்பர் ஸ்டாருக்கு முன்பணம் கொடுத்ததில் தயாரிப்புச் செலவுகளுக்கே தள்ளாடிக் கொண்டிருந்தது ஜுபிடர். அச்சமயத்தில் கைது நடவடிக்கை ஒரு வகையில் ஜுபிடருக்கு விடுதலையாக அமைந்தது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in