சிங்கீதம் சீனிவாச ராவ்: காலத்தை மீறிப் பயணித்தவர்! | அஞ்சலி

சிங்கீதம் சீனிவாச ராவ்: காலத்தை மீறிப் பயணித்தவர்! | அஞ்சலி
Updated on: 
2 min read

சிங்கீதம் சீனிவாச ராவ் என்கிற பெயர் வணிக சினிமாவுக்கானது மட்டுமே அல்ல. கதைசொல்லல் கலையில் புதுமைகளுக்கான முகவரி. சினிமாவை ஒரு வெகுஜன வடிவமாக அதன் வணிகத் தளத்திலேயே வைத்து, அதை எந்த அளவுக்குப் பரிசோதனைக்கு உட்படுத்த முடியும் என்று துணிச்சலாகச் சிந்தித்து, அதைத் திரை மொழியில் கையாண்டு வெற்றியும் கண்டவர்!

தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு, கன்னட, தமிழ்த் திரையுலகங்களுக்கும் மறக்க முடியாத முத்திரைப் படங்களைத் தந்து, இந்தி வரையிலும் தனது திறமையை நிரூபித்தவர்.

அவருடைய பெயரைக் கேட்டதுமே 80 மற்றும் 90களில் பிறந்தவர்கள் ‘ராஜ பார்வை’ (1981), ‘பேசும் படம்’ (1987), ‘அபூர்வ சகோதரர்கள்’ (1989), ‘மைக்கேல் மதன காமராஜன்’ (1990) ஆகிய நான்கு படங்களை மறக்க முடியுமா என்று சிலிர்ப்பார்கள். சென்னையில் திரைப்பட உலகம் உயிர்ப்புடன் இயங்கும் வடபழனி பேருந்து நிலையத்துக்குப் பின்னால் அமைத்திருக்கிறது பாஸ்கர் காலனி. அங்கே வீடு கட்டிக் குடியேறி வாழ்ந்தபடி, தெலுங்குத் திரையுலகுக்குப் ‘புஷ்பக விமான’த்தில் கடந்த 50 ஆண்டுகளாகப் பறந்துகொண்டிருந்த மகத்தான படைப்பாளி.

தரமான தொடக்கம்: செப்டம்பர் 21, 1931இல் ஆந்திர மாநிலத்தின் கூடூர் நகரில் பிறந்த சிங்கீதம் சீனிவாச ராவ், ‘நீதி நிஜாயிதி' (1972) என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே ‘நகைச்சுவை’யை ஓர் ஆயுதமாகக் கொண்டு சமூக விமர்சனம் செய்தவர். முதல் படத்தை எழுதி இயக்கு வதற்கு முன்பு, இயக்குநர் எல்.வி.பிரசாத்திடம் உதவி இயக்குநராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியவர்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in