கேட்டது ஒன்று; கிடைத்தது நன்று! | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 1

கேட்டது ஒன்று; கிடைத்தது நன்று! | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 1
Updated on: 
3 min read

அது 1949ஆம் ஆண்டு. ‘கன்னியின் காதலி’ படப்பிடிப்பில் இருந்த நேரம். அந்தப் படத்துக்கு வசனம் எழுத வாய்ப்புக் கேட்டு வந்த இளைஞருக்கு 22 வயது. ஆனால், அவருக்குப் பாடல் எழுத வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் கொடுத்த மெட்டுக்கு ஏற்ப பல்லவியை எழுதிக் கொடுத்து, திரையுலகில் ஒரு பாடலாசிரியராக நுழைந்தார் அந்த இளைஞர்.

‘கலங்காதிரு மனமே. உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே.’ மனதுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டும் வார்த்தைகளை ஒற்றை வரிக்குள் அடக்கிக் கொடுத்த அந்த இளைஞர், அடுத்து வந்த சில ஆண்டுகளில் அடைந்த விஸ்வரூப வளர்ச்சி காலங்களைக் கடந்தும் பேசப்பட்ட ஒன்று. அந்த இளைஞர்தான் ‘கவியரசர்’ என்று தலைமுறைகள் கடந்தும் தமிழரின் எண்ண மெல்லாம் நிறைந்து நிற்கும் நூற்றாண்டு நாயகர் கண்ணதாசன்.

பாட்டெழுதக் கிடைத்த முதல் வாய்ப்பில் தனக்குக் கொடுக்கப்பட்ட மெட்டுக்கு அடுத்த நிமிடமே பல்லவியை எழுதினார். அடுத்து வரும் முதல் சரணத்தை...

‘கடினப்படாமல் எதுவும் கைக்கு வராது. கஷ்டப்படுவார் தம்மைக் கை நழுவாது. அடுத்தடுத்து முயன்றால் ஆகாததேது’ - என்கிற எளிமையான வரிகளில் சோர்ந்து போன மனங்களில் தளர்ச்சியை நீக்கும் சொற்களைக் கொண்டு மூன்று நிமிடம் முடிவதற்குள்ளாகவே எழுதி முடித்துவிட, சொற்கள் வந்துவிழும் கண்ணதாசனின் அந்த வேகத்தைப் பார்த்து, முதல் படத்திலேயே ஐந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அவருக்கு அள்ளிக்கொடுக்கப்பட்டது.

கவிஞரின் இந்த முதல் பாடலுக்கு ‘பெஹாக்’ ராகத்தின் அடிப்படையில் இசை அமைத்தார் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா. கவிஞரின் முதல் பாடலைப் பாடியவர் என்கிற பெருமையை அடைந்தவர் கே.வி. ஜானகி.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in