காலத்தின் சுவர்களில் அழியாச் சித்திரம் | மர்லின் மன்றோ 100

நார்மா ஜீனாக இருந்த காலம், கவர்ச்சிப் பதுமையாக ஒரு காலம், மர்லின் மன்றோ எனும் ஆளுமை

நார்மா ஜீனாக இருந்த காலம், கவர்ச்சிப் பதுமையாக ஒரு காலம், மர்லின் மன்றோ எனும் ஆளுமை

Updated on
4 min read

பிரிட்டிஷ் அஞ்சல் துறை வரலாற்றில் முதன் முறையாக பாப் கலாச்சாரத்தின் அடையாள ஆளுமைகளை நினைவுகூரும் ஓர் அஞ்சல் தலையை வெளியிட இரண்டாம் எலிசபெத் மகாராணி தனிப்பட்ட முறையில் ஒப்புதல் அளித்தார்.

அந்த அஞ்சல் தலையில் இடம்பெற்றவர் மர்லின் மன்றோ. அவரின் சொந்த தேசமான அமெரிக்கா மூன்று வெவ்வேறு காலக்கட்டங்களில் அவருக்கு அஞ்சல்தலை வெளியிட்டிருக்கிறது. உலகின் பல நாடுகள் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டன.

மர்லின் மன்றோ இறந்து 63 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், ஐரோப்பிய பாப் கலாச்சாரத்தின் அடையாளமாக மாறிப்போன அவர் உருவாக்கிய தாக்கம், மாற்று கலாச்சாரத்தைக் கொண்ட நாடுகளிலும் கூட நின்று நீடிக்கிறது.

உலகெங்கிலும் அவருக்குச் சிலைகள் நிறுவப் பட்டிருக்கின்றன. அவரின் ஒளிப்படம் அச்சிடப் பட்ட கைப்பைகள் தொடங்கி அவரை ‘பிராண்ட்’ செய்யும் ஃபேஷன் ஆடைகள், அழகுப் பொருள் கள் இன்றைக்கும் அமோகமாக விற்பனையாகின்றன.

அவர் பயன்படுத்திய பொருள்களோ இன்றுவரை அதிக விலைக்கு ஏலம் போகின்றன. அவ்வளவு ஏன்! 1954இல் அவர் எடுத்துக் கொண்ட நெஞ்சக எக்ஸ்ரே படம் 75 ஆண்டு களுக்குப் பின் 45 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

கலாச்சார அடையாளம்

மர்லின் மன்றோவுக்கு முன்னும் பின்னும் பல பெண்கள் ஹாலிவுட்டில் புகழ்பெற்ற நட்சத்திரங்களாக ஒளிவீசி இருக்கிறார்கள். ஆனால், மர்லின் ஏற்படுத்திய தாக்கம் புரட்சிகரமானது.

‘மெலிந்த உடலமைப்பு’தான் அழகு என்கிற அதுவரையிலான பிம்பத்தை, வளைவு நெளிவுகள் கொண்ட (Curvaceous body) சற்று எடை கூடிய மர்லின் மன்றோவின் உடலமைப்பு உடைத்தெறிந்தது. உடல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பெண்களும் அவரைக் கொண்டாடத் தொடங்கினர்.

மர்லின் ஒரு நட்சத்திரமாக எழுந்தபோது, உலகளாவிய ஃபேஷன், அழகு சாதனத் துறையில் ஓர் ஓயாத அலையாக உருவெடுத்தார். இன்றும் ‘சிவப்பு உதட்டுச் சாயம்’ (Red Lipstick) என்றால் நம் நினைவுக்கு வரும் முதல் முகம் மர்லின் மன்றோவுடையதுதான்.

காற்றில் அலையும் தங்க நிற முடியழகு முதல் அவருடைய வசீகரமான புன்னகை வரை அழகு என்பதன் உலகளாவிய குறியீடாக மாறி நிற்கிறார். மர்லின் மன்றோ நடித்து, 1954இல் வெளியான ‘தி செவன் இயர் இட்ச்’ (The Seven Year Itch) திரைப்படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.

நியூயார்க் நகரின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் காற்றுப்போக்கி ‘கிரில்’லின் மேல் நின்று கொண்டிருந்தார் மர்லின். அப்போது காற்றுப்போக்கியிலிருந்து வெளிப்பட்ட காற்று அவர் அணிந்திருந்த கவுனை மேல்நோக்கித் தள்ள, அதை மர்லின் கீழ்நோக்கி தள்ளிய அந்த எதிர்பாராத தருணத்தைப் படமெடுத்தார் அப் படத்தின் ஒளிப்படக் கலைஞர்.

காற்றில் பறக்கும் அவரின் ஆடை போட்டோவைப் போல் ‘போஸ்’கொடுத்து படம்பிடிக்க விரும்பும் கதாநாயகிகள் எல்லாக் காலத்திலும் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். தங்களையும் மர்லின் மன்றோ வாகக் கற்பனை செய்துகொண்டுதான் நடிக்கி றார்கள்.

50களுக்குப் பிறகான கதாநாயகிகளே இப்படி என்றால், மர்லின் வரலாற்றை அறியாம லேயே அவரை நேசிக்கும் ஒவ்வொரு தலை முறையும் அவரைத் தங்களுக்குத் தேவையான கோணத்தில் மீள்கண்டுபிடிப்பு (Reinvent) செய்து கொண்டே இருக்கிறது. இன்றைய ‘ஜென் இசட்’ தலைமுறை வரை அவர் ஒரு கலாச்சார அடையாளமாக (Cultural Icon) நிலைபெற்றிருப்பது வரலாற்று அதிசயம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in