‘விலங்கு’ இயக்குநரின் அவதாரம்! | இணையத் திரை

‘விலங்கு’ இயக்குநரின் அவதாரம்! | இணையத் திரை
Updated on
2 min read

‘நாளைய இயக்குநர்’ டிவி நிகழ்ச்சியில் வெளிச்சம் பெற்ற கையோடு, நேரடியாகப் படம் இயக்கப் போகாமல், குடும்ப சென்டிமென்ட் இயக்குநர் பாண்டிராஜிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் பிரசாந்த் பாண்டியராஜ்.

ஜீ5 தயாரிப்பில் விமல் நடிப்பில் வெளிவந்து அதிரிபுதிரியாக வெற்றிபெற்ற ‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கி, ‘யாரப்பா இந்த பிரசாந்த் பாண்டியராஜ்’ என்று ஓடிடி ரசிகர்களைத் தேட வைத்தவர்.

அடுத்து, ‘விடுதலை 1’ படத்துக்குப் பின் நடிகர் சூரியை ஒரு நாயக நடிகராக நிலைநிறுத்திய ‘மாமன்’ திரைப்படத்தை எழுதி இயக்கினார். ‘மாமன்’ படத்தைத் தொடர்ந்து தற்போது, அவருக்குப் புகழை அள்ளித்தந்த அதே ஜீ5 நிறுவனத் துக்காக ‘வாரண்ட்’ என்கிற இணையத் தொடரின் மூலம் பிரசாந்த் பாண்டியராஜ் நாயகனாக அறிமுகமாகிறார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in