கனவோடு வாழ்ந்திருந்தாள்! | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 8

‘தாயே உனக்காக’ படத்தில் புஷ்பலதா, சிவகுமார் | படங்கள் உதவி: ஞானம் |

‘தாயே உனக்காக’ படத்தில் புஷ்பலதா, சிவகுமார் | படங்கள் உதவி: ஞானம் |

Updated on: 
2 min read

செய்யும் பணிகளில் எல்லாம் மிகவும் உன்னதமானது தாய்நாட்டைக் கண் இமை போலக் காக்கும் ராணுவ வீரனின் பணிதான். அதேபோல் தியாகத்தில் உன்னதமானது, தேசத்தைக் காக்கும் அந்த ராணுவச் சேவைக்காக ஒரே மகனை ஒப்படைக்கும் தாயின் தியாகம்.

1966இல் 'தி பாலட் ஆஃப் எ சோல்ஜர்' (The Ballad of a Soldier) எனும் ரஷ்ய மொழிப் படத்தைத் தழுவி கவியரசர் திரைக்கதை அமைத்துப் பாடல்கள் எழுதி வெளிவந்த படம் ‘தாயே உனக்காக’. ஒரு ராணுவ வீரனுக்கும் அவனுடைய அன்னைக்கும் இடையேயான பாசப் பிணைப்பை மையமாகக் கொண்ட படம்.

பன்முகக் கலைஞர் சிவகுமார் நடித்த மூன்றாவது படம். அவர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த முதல் படமும்கூட. அவரை ஊக்குவிப்பதற்காக அப்போது முன்னணி நட்சத்திரங்களாக இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், நாகேஷ், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, ஜெய லலிதா ஆகியோர் ஈகோ பார்க்காமல் சின்ன சின்ன வேடங்களில் கௌரவ நடிகர்களாக நடித்துக் கொடுத்தனர்.

இதில், தேசத்துக்காக மகனை ஒப்படைத்துவிட்டு அவன் வருகைக்காகக் காத்திருக்கும் ஒரு தாயின் மனதில் ஏற்படும் ஏக்கத்தையும் எதிர்பார்ப்புகளையும் பாட லாக்கிக் கொடுத்தார் கவியரசர்.

அதற்கு ‘சக்ரவாக’ ராகத்தில் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன் இதயம் தொடும் வகையில் மெட்டமைத்து ‘இசை மணி' சீர்காழி கோவிந்தராஜனைக் கம்பீரமும் உருக்கமும் வெளிப்பட உணர்வுப் பெருக்கோடு பாட வைத்தார்.

Loading content, please wait...

X