

படங்கள் உதவி: ஞானம்
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். பாலகிருஷ்ணன், பால முருகன், பாலாம்பிகை என்றெல்லாம் தெய்வத்தையே குழந்தையாகப் பாவித்து வணங்குவது உண்டு. குழந்தையின் வடிவில் தெய்வத்தைப் பார்க்கும்போது அங்கு தாய்மையின் பூரணத்துவத்தை நாம் உணர முடியும்.
அதை உணர்த்தும் வகையில் ஒரு தாயாகக் குடும்பத்தைத் தாங்கும் இல்லத்தரசியின் மனநிலையைப் பாடல் வரிகளில் அற்புதமாகப் படைத்திருக்கிறார் கவியரசர். 1972இல் வெளியான ‘அப்பா டாட்டா’ என்கிற படத்துக்காக கண்ணதாசன் எழுதி, அந்தப் பாடலுக்கு மெல்லிசை மாமணி வி.குமார் ஹரிகாம்போதி ராகத்தின் ஸ்வரங்களை அடிப்படை யாகக் கொண்டு இசையமைத்தார்.
இசையரசி பி.சுசீலா ‘தமிழே பிள்ளைத் தமிழே’ என்று தனது தேனினும் இனிய குரலில் பாடிக் கொடுத்திருக்கிறார். அன்றைய காலக்கட்டத்தில் இலங்கை வானொலியில் இந்தப் பாடல் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். அந்த அளவுக்குப் பிரபலமான பாடல்.
பல்லவியில் தனது மகனின் மழலை யைத் தமிழ் மொழியாகவே அந்தத் தாய் பாடுகிறாள்.
‘தமிழே பிள்ளைத் தமிழே
தவழும் தங்கச் சிமிழே
குரலே கன்றின் குரலே – எங்கள்
குடும்பம் காக்கும் நிழலே’