கடும் மழையில் குடையாவான் | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 2

‘அநாதை ஆனந்தன்’ | படங்கள் உதவி ஞானம்

‘அநாதை ஆனந்தன்’ | படங்கள் உதவி ஞானம்

Updated on: 
2 min read

திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பார்கள். பெற்றவர்கள், உற்றவர்கள் என்று யாருமே இல்லாமல், தனியாகவே வாழ்க்கைக் கடலில் பயணிக்கும் ஓர் ஆதரவற்ற சிறுவனை மையப்படுத்தி சார்லஸ் டிக்கன்ஸ் புனைந்த ‘ஆலிவர் ட்விஸ்ட்’ என்கிற நாவலை மூலக்கதையாகக் கொண்டு தமிழில் ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பாக 1970இல் வெளிவந்த படம் ‘அநாதை ஆனந்தன்’.

இந்தப் படத்துக்காக, தனது அபிமானத்துக்குரிய எம்பெருமான் கண்ணனை மையப்படுத்திக் கவியரசர் எழுதிக் கொடுத்த ‘அழைத்தவர் குரலுக்கு வருவேன்' பாடல் ‘டைட்டில் கிரெடிட்’ பாடலாக காட்சிப்படுத்தப்பட்டது.

அப்பாடல், ‘கிருஷ்ண கானம்’ போன்ற தனிப் பாடல்களாக இருந்தாலும் சரி, திரைப்படத்தின் காட்சிச் சூழலுக்காக எழுதிய கதை நகர்த்தும் பாடலாக இருந்தாலும் சரி, அந்த புருஷோத்தமன் புகழ் பாடுவதில் அவருக்கு நிகர் அவரேதான்! பக்தியில் உருக்கும் அவரது கவியுள்ளத்துக்கு இந்தப் பாடல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தப் பாடலின் சிறப்பம்சம், அதில், ‘கண்ணனை வணங்கி வேண்டிக் கொள்ளுங்கள்’ என்கிற தொனியில் ஒரு வரிகூட இருக்காது. ‘நீங்கள் எப்போதும் போல இருங்கள், எல்லாவற்றையும் அவன் பார்த்துக் கொள்வான்’ என்பதாக இருக்கும்.

துன்பத்தில் இறைவனை அழைக்கும் போது நம் குறையை அவன் தீர்க்க வேண்டுமே என்று நம் மனதுக்குள் ஒரு மூலையில் இருக்கும் அச்சம் கலந்த சந்தேகத்தை, கவிஞரின் தொடக்கப் பல்லவி போக்குவதாக இருக்கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in