

கடந்த 42 வாரங்களாகப் பல படங்கள் எவ்வாறு ‘சுட்ட’ கதைகளால் உரு வாகின என்று பார்த்தோம். இத்தொடரை 100 வாரம் தாண்டியும் எழுதலாம். ஏனென்றால் அவ்வளவு படங்கள் பல இந்திய மொழிகளிலும் சளைக் காமல் சுடப்பட்டுள்ளன.
இந்தத் தொடரை தொடர்ந்து வாசிக்கும் முன்பு, ‘நகலெ டுத்தல்’, ‘இன்ஸ்பிரேஷன்’ ஆகியன குறித்து விரிவாகத் தெரிந்துகொள்வது அவசியம். அது நல்ல திரைப்படங்களை நோக்கி நம்மை நகர்த்திச் செலுத்தும்.
ஓர் எடுத்துக்காட்டுக்கு A என்கிற இயக்குநர் வெளிநாட்டில் வாழ்கிறார். அவர் ஒரு படத்தை ஆங்கிலத்தில் எடுத்து வெளியிடுகிறார். அவருக்கும் அந்தப் படம் வெளியான திரையுல கத்துக்கும் அது புகழ் சேர்க்கிறது.
வசூல்ரீதியாகப் படம் நன்றாக ஓடுகிறது. அவரது மற்றொரு படம் தோல்வியில் சுருண்டுவிடுகிறது. என்றாலும் சளைக்காமல் இயக்குநர் A வேறு படங்களை இயக்கப் புறப்பட்டுவிட்டார். அவருக்குப் புகழ் சேர்த்த படம் மறக்கப்பட்டும் விட்டது.
இப்போது B என்கிற இயக்குநர் இந்தியாவில் இருக்கிறார். ஏதோ ஓர் உலகப் பட விழாவில் A இயக்கிய அந்தப் படத்தை B பார்க்கிறார். சடாரென்று அவருக்குள் ‘இந்தப் படம் நல்லா இருக்கே’ என்று தோன்றுகிறது. B இந்திய சினிமாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் புகழ்பெற்றவர்.
தான் பார்த்த அந்தப் படம் குறித்த எண்ணம் அவரிடம் ஒரு தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. அவர் சும்மா இருக்க வில்லை. உடனடியாக நாடு திரும்பி யதும் தன்னைப் பாதித்த அந்தப் படத்தை மையமாக வைத்துத் தமிழுக்கு ஏற்றபடி ஒரு கதையை உருவாக்குகிறார்.
ஒரு தயாரிப்பாளரை ‘கன்வின்ஸ்’ செய்கிறார். படம் எடுக்கத் தொடங்குகிறார். படம் குறித்த செய்திகளும் விளம்பரங்களும் வெளியிடப் படுகின்றன. படம் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் படம் பார்க்கிறார்கள். அதில் ஒருவர் A இயக்கியிருந்த ஒரிஜினல் படத்தையும் பார்த்திருப் பவர். அவருக்குப் பளீரென்று ‘இது அந்தப் படமாச்சே?’ என்கிற கேள்வி எழுகிறது. அதனைப் பற்றித் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஒரு பதிவாகப் பகிர்கிறார். விஷயம் பரவுகிறது.