

திராவிட இயக்க சினிமாவில் கதை, வசனகர்த்தாக்கள் எவ்வளவு முக்கியத்துவம் பெற்று விளங்கினார்களோ, அதே அளவுக்கு அவர்களின் வசனங்களைப் பேசி நடித்த கதாநாயகர்கள், அந்த இயக்கத்தை எளிய மக்களிடம் எடுத்துச்செல்லப் பெரும் பலமாக விளங்கினார்கள். அவர்களில் கலைவாணர் ஒரு பன்முகக் கலைஞர் என்றாலும், முதல் மாஸ் கதாநாயகன் என்கிற வலிமையைத் திராவிட சினிமாவுக்குக் கொடுத்தவர் ‘வேலைக்காரி’யின் நாயகனான கே.ஆர்.ராமசாமி.
கோயில்களின் நகரமான கும்ப கோணம் அருகேயுள்ள சின்ன கிராமம் அம்மாசத்திரம். அந்த ஊரில் பிறந்து, வளர்ந்து, ஐந்தாம் வகுப்புவரை பயின்று, ஏழு வயதில் பாலர் நாடக சபையான மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்து, எட்டு வயதில் மேடையேறியவர் கே.ஆர்.ராமசாமி. 13 வயதில் டி.கே.எஸ். சகோதரர்களின் பால சண்முகானந்தா குழுவில் இணைந்து 21 வயதுவரை பயணித்தார். பின்னர், கலைவாணர் என்.எஸ்.கே குழுவில் இடம்பெற்றார். கலைவாணர் காங்கிரஸ் அபிமானியாக இருந்த