

கம்பெனி நாடகங்களில் பெண் வேடங்களையும் ஆண்களே ஆக்கிரமித்து வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. ‘கூத்தாடிப் பிழைப்பு’ பெண்களுக்கு ஏற்றதல்ல என்கிற இறுகிப்போன சமூகத்தின் மனக் கறையைக் கழுவி வெளி யேற்றியவர்கள் தேவரடியார் பெண்கள்தான்.
அவர்கள்தான், பெண்களின் வேடத்தை மட்டுமல்ல; ஆண்களின் வேடத்தையும் நாடகத்திலும் சினிமாவிலும் ஏற்று நடிக்கலாம் என்று துணிவு கொண்டார்கள். அதேபோல், சிறுமிகளைச் சேர்க்கக் கூடாது என்று கறார் காட்டிய ‘பாய்ஸ் கம்பெனி’களில் துணிந்து நுழைந்து, நடிப்பைக் கற்றுக் கலையுலகில் புகழ்பெற்ற பல பெண் கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் எல்லாருமே நட்சத்திரம் என்கிற உச்சத்தைத் தொட்டுவிடவில்லை.