Published : 08 Feb 2018 08:31 AM
Last Updated : 08 Feb 2018 08:31 AM

திரை விமர்சனம்: ஏமாலி

மெ

ன்பொருள் துறையில் வேலை செய்யும் மாலி என்கிற மாலீஸ்வரனும் (சாம் ஜோன்ஸ்) ரீத்து வும் (அதுல்யா ரவி) காதலர்கள். இவர்கள் காதலில் ஒரு செல்ஃபி சிக்கலை ஏற்படுத்த, காதலைச் சட்டென்று முறித்துக்கொள்கிறார் ரீத்து. இதைப் பொறுக்கமுடியாமல் தன் நண்பர்களுக்கு பிரேக்-அப் பார்ட்டி கொடுக்கிறார் மாலி. பார்ட்டிக்கு வரும் மாலியின் நண்பர்கள் அரவிந்த் (சமுத்திரக்கனி) மற்றும் ராதா கிருஷ்ணன் (பாலசரவணன்) ஆகியோரிடம் புலம்பித் தள்ளும் மாலி, தற்போது வேறு ஒருவனுடன் தனது காதலி பழக ஆரம்பித்துவிட்டதைக் கூறி அவளைக் கொலை செய்யப் போவதாகக் கூறுகிறார்.

மன அழுத்தத்தால் தவிக்கும் மாலியை மடை மாற்ற, “கொலை செய்வது பெரிய விஷயமில்லை. போலீஸில் சிக்காமல் கொலை செய்வது என்பதுதான் முக்கியம். எனவே ‘ட்ரையல் அண்ட் எரர்’ பரிசோதனை முறையில் கொலை நடந்துவிட்டதாகக் கருதி, நாமே பாவனையான ஒரு விசாரணையை நடத்துவோம். அதில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்போம். அவற்றையெல்லாம் அடைத்த பின் கொலை செய்யலாம்” என்று ஆலோசனை தருகிறார் அரவிந்த். அதை மாலியும் ஏற்றுக்கொள்ள அவர்களது பார்வையில் கற்பனையான விசாரணைத் தொடங்குகிறது. விசாரணையில் கொலை செய்யப்போகும் மாலி மாட்டிக்கொண்டாரா? ரீத்துவின் கதி என்ன? மாலி மனதைத் திசைதிருப்ப முடிந்ததா? இல்லையா என்பதே மீதிக் கதை.

கதாநாயகன் ‘மாலி’யின் பெயரைத் தலைப்பின் பின் இணைப்பாக வைத்த இயக்குநர், திரைக்கதையில் இதைவிட சுவாரஸ்யமான விளையாட்டை விளை யாடி கடைசிவரை விறுவிறுப்பாகப் படத்தை எடுத்துச் சென்றதைப் பாராட்ட லாம்.

போலீஸில் மாட்டாமல் கொலைசெய்ய, மாதிரி விசாரணை செய்யும் காவல் அதிகாரியாக சமுத்திரக்கனியும் உதவிக் காவல் அதிகாரியாக நாயகன் சாம் ஜோன் ஸும் வருகிறார்கள். அவர்களால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது. டெல்லியில் இருந்து வரும் சிபிஐ அதிகாரியாக அதே சமுத்திரகனி, அவரது உதவியாளர் சாம் ஜோன்ஸ் என்று விறு விறுப்புக் கூடும் விசாரணையில் பின் இணைப்பாக மாலி-ரீத்து காதல் ப்ளாஷ் பேக் காட்சியும் அரவிந்த் - ரோகினி ’லிவ்விங் டுகெதர்’ உறவும் குறுக்கிடும்போது படம் சட்டென்று தொங்குகிறது.

ஒரு காதல் தோல்வி - பழிவாங்கும் கதையை புலன்விசாரணை நாடகமாக மாற்ற முயற்சித்த இயக்குநரின் கற்பனையும் அதை சுவாரஸ்யம் குறையாமல் கொடுக்க வேண்டும் என்ற அவரின் முயற்சியும் பாராட்டத்தக்கது. ஆனால் இன்றைய நவயுகக் காதல் இதுதான், ‘லிவிங் டுகெதர்’ என்ற வாழ்க்கைமுறை எப்படி இருக்க வேண்டும்? ஆண்கள் இன்று பெண்களை எப்படிப் பார்க்கிறார்கள்? அவர்களை எப்படிக் கையாள்கிறார்கள்? பெண்கள் ஆண்களிடம் எப்படி நடந்துகொள்கிறார்கள் என காதலையும் உறவுகளையும் சித்தரிக்கும் காட்சிகளில் மிக அபத்தமான கலாச்சாரப் பாடம் நடத்தி யிருப்பது காதலையும் உறவுகளையும் கொச்சைப்படுத்துகிறது.

ஜெயமோகனின் வசனங்கள் சமுத்திரக்கனிக்கான வசனக் காட்சிகளை காப்பாற்றுகின்றன என்றாலும் பெரும்பான்மையாக நிலவும் வாழ்வியல் மீது கரியைப் பூசும் கலாச்சாரத் தாக்குதலாகவே இருக்கிறது இப்படத்தின் உள்ளடக்கம்.

அறிமுக நாயகன் சாம் ஜோன்ஸ் நல்வரவு. காதலில் கசிந்துருகுவது, ‘கஸ்கா முஸ்கா’வுக்கு (உபயம்: ஜெயமோகன்) ஏங்குவது, பிரேக்-அப் சொன்ன நாயகியை வெறுப்பேற்றுவது, கடைசியில் அவளைக் கொல்வேன் என்று கர்ஜிப்பது என்று எல்லா காட்சிகளிலுமே ஜொலிக்கிறார். நாயகி அதுல்யாவுக்கு கவர்ச்சி மட்டுமே கை கொடுத்திருக்கிறது.

படத்தின் மிகமோசமான தொழில்நுட்ப அம்சம் ஒளிப்பதிவு. சமீபத்திய படங்களில் மிகமோசமான ஒளிப்பதிவுக்கு இப்படத்தை உதாரணமாகக் கூறலாம். சாம் டி.ராஜின் இசையில், “இனிமேலும் நீ இல்லை தனி, இனி நானும் நானில்லை தனி” என்ற பாடல் ரசனை. “நை நை பாய்பிரண்ட் அல்வா கொடுப்பான் ஜாக்கிரதை” என்ற பெண்களுக்கான பிரேக்-அப் பாடல் துள்ளல் இசையால் ஈர்க்கிறது.

படத்தின் முடிவு எதிர்பாராதத் தன்மையுடன் இருந்தாலும் காதல் தோல்விக்காக கொலையோ, தற்கொலையோ தேவையில்லை என்ற செய்தியைக் கூற முயற்சிக் கும் இயக்குநரின் குரலுக்கு எதிர் குரலா கவே ஒலிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x