

முதல் விஷயம் நட்சத்திரங்கள் பிரம்மாண்டமான வாயுப் பந்துகள். இருந்தாலும் அவற்றுக்குள்ளேயே ஈர்ப்புசக்தி உண்டு. அது மட்டுமல்லாமல், அவை அங்கம் வகிக்கும் பால்வெளியில் அவை தொடர்ந்து இயங்கிக்கொண்டும், அவற்றினுடைய பால்வெளியின் மையத்தை அடிப்படையாகக் கொண்டு சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.
அவற்றின் உள்ளே நிலவும் ஈர்ப்புசக்தி, செயலற்றதன்மை (inertia) ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையின் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் இடத்தைப் பராமரிக்கின்றன.