திருமண தோஷம் நீக்கும் கோயம்பேடு வைகுண்ட வாசர் | பரிகார ஸ்தலங்கள்

திருமண தோஷம் நீக்கும் கோயம்பேடு வைகுண்ட வாசர் | பரிகார ஸ்தலங்கள்
Updated on: 
2 min read

சென்னை கோயம்பேட்டில் இருந்து சுமார் 1 கிமீ தூரத்தில் உள்ள வைகுண்டவாசப் பெருமாள் கோயில், திருமண தோஷம் நீக்கும் தலமாகப் போற்றப்படுகிறது. லவகுசர் வழிபட்ட இத்தலத்தில் சீதாபிராட்டி தாய்மைக் கோலத்தில் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு.

சீதையின் கற்புக்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாக பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க ராமர் அவளை வனத்துக்கு அனுப்பினார். வனத்திலிருந்த வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு கொடுத்து தன்னுடன் தங்க வைத்தார்.

கர்ப்பவதியாக இருந்த அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் இரண்டு மகன்களை பெற்றாள். ராமன் தங்களது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர்.

இச்சமயத்தில் ராமன், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேத யாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அதைக் கட்டிப்போட்டுவிட்டனர்.

குதிரையுடன் வந்த சத்ருக்னன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், சத்ருக்னனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த லட்சுமணரையும் வென்றனர்.

Loading content, please wait...

X