பில்லி, சூனியம் களையும் மடப்புரம் பத்ரகாளியம்மன்

பில்லி, சூனியம் களையும் மடப்புரம் பத்ரகாளியம்மன்
Updated on
1 min read

ஒரு பிரளய காலத்தில் மதுரை நகரம் வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி அம்மன், மதுரைக்கு எல்லை காட்ட வேண்டும் என்று இறைவனிடம் கேட்க, சிவபெருமான் தன் கழுத்தில் உள்ள ஆதிசேஷனை எடுத்து மதுரையை வளைத்தார்.

மேற்கே திருவேங்டகமும் தெற்கே திருப்பரங்குன்றமும் வடக்கே திருமாலிருஞ் சோலையும் வைத்து எல்லையை வகுத்த இறைவன் கிழக்கில் தற்போது உள்ள மடப்புரத்தில் படத்தையும் வாலையும் ஒன்று சேர்த்து எல்லை காட்டினார். இதனால் ஆதிசேஷன் வாயில் உள்ள விஷத்தை அம்மன் உண்டு இங்கு காளியாக எழுந்தருளினார்.

அங்குள்ள அய்யனார் காவல் தெய்வம் அம்மனுக்கு தன் வாகனமாகிய குதிரையை தந்து அம்மனுக்கு நிழல் தந்து அடைக்கலம் தந்தார். இதனால் ‘அடைக்கலம் காத்த அய்யனார்’ என்று அவர் பெயர் பெற்றார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in