

பக்தர்களில் பலர் குருவும், தட்சிணாமூர்த்தியும் ஒருவரே என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர்களுள் ஒருவர் ஞான குரு, மற்றொருவர் நவக்கிரக குரு. வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்கச் செல்பவர்கள், தட்சிணாமூர்த்தியை வணங்கிவிட்டு அவருக்கு பரிகார அர்ச்சனை செய்து வருவது நடைபெறுகிறது.
ஆலங்குடியில் குரு பகவானும், பட்டமங்கலத்தில் தட்சிணா மூர்த்தி சுவாமியும் பிரபலமடைந்துள்ளதால், இருவரும் ஒன்றே என்று பக்தர்கள் எண்ணுகின்றனர். நவக்கிரகங்கள் என்பது இறைவனின் கட்டளையை செயல்படுத்தக் கூடிய 9 கோள்கள் ஆகும். அவற்றுள் ஒருவர்தான் குருபகவான் எனும் பிரஹஸ்பதி (வியாழன் கோள்). வடக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் இவரது விருப்பமான நிறம் மஞ்சள்.