மகசூலைப் பெருக்கும் இயற்கை முறை தென்னை சாகுபடி | இயற்கை விவசாயத்தை நம்புவோம்

மகசூலைப் பெருக்கும் இயற்கை முறை தென்னை சாகுபடி | இயற்கை விவசாயத்தை நம்புவோம்
Updated on
3 min read

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சுடலைஆண்டி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் நல்லப்பன், உடுமலையைச் சேர்ந்த அப்துல் கலாம் மற்றும் லட்சுமி அம்மாள், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்னுத்தாயி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த புஷ்பராஜா, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த பெரியசாமி ஆகியோர் இயற்கை வேளாண்மை முறையில் தென்னை சாகுபடி செய்து, அதிக மகசூல் பெற்றுள்ளனர்.

​முன்ன​தாக, மட்டை உரித்த பின்பு சுமார் 350 கிராம் மட்டுமே இருந்த இவர்​களின் தேங்​காய் எடையானது, தங்களின் முறையான இயற்கை சாகுபடி மற்றும் பராமரிப்பு உத்திகள் காரண​மாக, தற்போது 850 கிராம் முதல் 1,250 கிராம் (ஒன்னே​கால் கிலோ) வரை அதிகரித்​துள்ளது.

முறையான பராமரிப்​பின் மூலம் ஒரு வெட்டுக்​குக் கிடைக்​கும் காய்​களின் எண்ணிக்கை 50 விழுக்​காடு வரை உயர்ந்துள்ளதாக இவர்கள் மகிழ்ச்சி​யுடன் தெரிவிக்​கின்​றனர். உவர்ப்பு நிலம் மற்றும் நீர் வளம் குறைந்த மண்ணிலும் இந்த மகசூல் சாத்​தி​ய​மாகி​யுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.

ஆரம்பகால வளர்ப்பு முறைகள்

தமிழகத்​தில் தென்னை சாகுபடி பரப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் வேளை​யில், தரமான கன்றுகளைத் தேர்வு செய்​தல், முறையான இடைவெளி விட்டு நடுதல், மண்ணின் தன்மைக்​கேற்ற சத்துக்களை வழங்குதல், நோய் மற்றும் வண்டு​களின் தாக்​குதலைத் தடுக்​கும் ஆரம்பகால வளர்ப்பு முறை​கள், மாதவாரியான பராமரிப்பு, முறையான நீர் மேலாண்மை ஆகியவை விவசா​யிகளுக்கு நிச்​சயம் வெற்றியைத் தேடித்​தரும்.

தென்னை மரங்​களுக்​குத் தேவையான சத்துக்​களை​யும், பாசனத்தை​யும் முறையாக வழங்கி வந்தால், நோய், வண்டுகள் பாதிப்பு​களி​லிருந்து மரங்​களுக்​குத் தேவையான நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, நல்ல விளைச்சல் கிடைக்​கும்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in