நம்மாழ்வாரின் சிந்தனை

நம்மாழ்வாரின் சிந்தனை
Updated on
1 min read

"இயந்திரம் சாணி போடாது, உழவுமாடுதான் சாணி போடும்" – இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் முழங்கிய இந்த எளிய வரி, வெறும் விவசாய உத்தி அல்ல; அது ஒரு மாபெரும் பொருளாதார, சமூகத் தத்துவம்.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் புகுத்தப்பட்ட ரசாயனங்களும், இயந்திரமயமாக்கலும் உழவர்களை எப்படிச் சுயமாகச் சிந்திக்கும் திறனற்றவர்களாக மாற்றின என்பதைத் தனது வாழ்நாள் உரைத்தொகுப்புகள் மூலம் அவர் தோலுரித்துக் காட்டினார்.

நம்மாழ்வாரின் முதன்மையான கவலை, விவசாயி தன் சுயசார்பை இழப்பது பற்றியதாகவே இருந்தது. "ஒரு காலத்தில் தனக்குத் தேவையான விதை, உரம், பூச்சிவிரட்டி என அனைத்தையும் தன் பண்ணையிலேயே தயாரித்த உழவன், இன்று எல்லாவற்றிற்கும் கடையேற வேண்டியுள்ளது" என்று மேடைகளில் அவர் வேதனைப்பட்டார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in