வெட்டிவேர் சாகுபடியில் வெற்றி பெறலாம்

வெட்டிவேரைப் பிரித்து எடுக்கும் பணியாட்கள்.

வெட்டிவேரைப் பிரித்து எடுக்கும் பணியாட்கள்.

Updated on: 
2 min read

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான நாகை மாவட்டத்தில், போதிய நீரின்றி நெல் சாகுபடி தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் நிலையில் நெல்லுக்கு மாற்றாக வேறு பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன் வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ஆனாலும் வெகு சிலரே மாற்று விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்களும் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அப்படிப்பட்ட நிலையை முறியடித்து நெல்லுக்கு மாற்றாக ‘வெட்டிவேர்’ சாகுபடி செய்து அதிலிருந்து லாபம் எடுத்து அசத்தியுள்ளனர் நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள ஆய்மூரைச் சேர்ந்த பட்டதாரி தம்பதியினர்.​

பொறியியல் பட்டதாரியான ராஜ்குமார், பி.எஸ்சி பட்டதாரியான அவரது மனைவி சந்தியா இருவரும் தங்களின் நிலத்திலிருந்து போதிய வருவாய் கிடைக்காத நிலையில் மாற்று விவசாயம் குறித்து யோசித்தனர்.

பலரிடமும் உரையாடிய அவர்கள், யூடியூப் மூலம் பல்வேறு மாற்று விவசாயம் குறித்த தேடலில் ஈடுபட்டனர். அப்போது குறைந்த செலவில், குறைவான உழைப்பில் அதே நேரம் லாபகரமான முறையில் வெட்டிவேர் சாகுபடி செய்வது பற்றி அறிந்து கொண்டனர்.

Loading content, please wait...

X