Published : 25 Sep 2017 11:19 AM
Last Updated : 25 Sep 2017 11:19 AM

ஆப்பிள் ஐபோன் 10

ஐ போன். ஒரு சொல் உலகை கட்டிபோட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபோனை மாற்றுபவர்கள் ஏராளம். ஐபோன் காதலர்கள் என்ற தன்னை பிரகடனப்படுத்தி கொள்பவரும் உண்டு. அந்த அளவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உலகம் முழுவதும் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்பிள் ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்ட 10 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2007-ம் ஆண்டு முதல் ஐபோன் தொழில்நுட்ப உலகில் புரட்சி என்றே சொல்லலாம். அதிலிருந்து இன்று வரை ஒவ்வொரு முறை புதிய ஐபோனை அறிமுகப்படுத்தும் போதும் பல தொழில்நுட்ப வசதிகள், வடிவமைப்பில் நேர்த்தி என மிரளவைத்துக் கொண்டிருக்கிறது. ஐபோன் பற்றி சில தகவல்கள்…..

ஆப்பிள் ஐபோன்களின் வருமான வளர்ச்சி (கோடி டாலரில்)

2007 - 63

2008 – 674

2009 – 1,303

2010 – 2,517

2011 - 4,599

2012 - 7,869

2013 – 9,127

2014 – 10,199

2015 – 15,504

2016 – 13,670

ஐபோன்களின் விற்பனை (மில்லியனில்)

2007 – 1.4

2008 – 11.6

2009 – 20.7

2010 – 40

2011 – 72.3

2012 – 125

2013 – 150.3

2014 – 169.2

2015 – 231.2

2016 – 211.9

ஆப்பிள் ஐபோன் வரலாறு

1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 2 – ஆப்பிள் நிறுவனம் நியூட்டன் மெசேஜ் பேட் என்ற மினி மொபைல் சாதனத்தை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு சில ஆண்டுகளிலேயே இந்த சாதனத்தின் விற்பனையை நிறுத்திவிட்டது.

2005-ம் ஆண்டு செப் 7 – மோட்டரோலா ரோக்ர் இ1 என்ற மொபைல் ஆப்பிள் ஐடியூன் என்ற சாப்ட்வேர் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மொபைல் வடிவமைப்பில் ஸ்டீவ் ஜாப்ஸ் திருப்திபடவில்லை

2007-ம் ஆண்டு ஜூன் 29 – முதல் ஐபோன் 2ஜி தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

2007-ம் ஆண்டு செப் 10 – முதல் ஐபோனின் விற்பனை 10 லட்சத்தை தாண்டியது.

2008-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி ஆப்பிள் ஐபோன் 2 அறிமுகப்படுத்தப்பட்டது. 3ஜி தொழில்நுட்பத்துடன் வெளிவந்தது. ஜிபிஎஸ் வசதி இருந்தது.

அனைத்து அப்ளிகேஷன்களும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்தே டவுன்லோடு செய்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டது. அப்ளிகேஷன் டெவலெப்பர்கள் 70 சதவீத பங்கை தங்களது அப்ளிகேஷனுக்கு பெற்றனர்.

2009-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி ஐபோன் 3ஜிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. 3 மெகா பிக்சல் கேமரா மற்றும் வீடியோ எடுக்கும் திறனோடு வந்த முதல் ஐபோன் இதுவே.

2010-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி ஐபோன் 4 அறிமுகப்படுத்தப்பட்டது. ரெட்டினா டிஸ்பிளே அண்ட் பேஸ்டைம் வீடியோ ஆகிய வசதிகள் கொண்டிருந்தன. கூடுதலாக இரண்டாவது முன்பக்க கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது.

2011-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஐபோன் 4எஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்முதலில் 8 மெகா பிக்சல் திறனுடன் இந்த ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டது. 1080 வீடியோ குவாலிட்டி திறனுடன் வந்தது. ஐகிளவுட் மற்றும் ஐமெசேஜ் ஆகிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

2013-ம் ஆண்டு செப் 20 – ஐபோன் 5எஸ் மற்றும் ஐபோன் 5சி விற்பனைக்கு வந்தது.

2014-ம் ஆண்டு செப் 19 – ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் விற்பனைக்கு வந்தது. 4.7 இன்ச் மற்றும் 5.5 இன்ச் டிஸ்பிளே திறனுடன் வந்தது. வை-பை, ஆப்பிள் பே ஆகிய வசதிகள் இருக்கின்றன.

2016-ம் ஆண்டு மார்ச் 31 – ஐபோன் எஸ்இ அறிமுகப்படுத்தப்பட்டது.

2016-ம் ஆண்டு செப் 16 – ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் அறிமுகப்படுத்தப்பட்டது. வயர் இல்லாத இயர்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தண்ணீரில் நனைந்தாலும் ஒன்றும் ஆகாதபடியும் 12 மெகாபிக்சல் கேமரா திறனையும் கொண்டிருந்தது.

2017-ம் ஆண்டு செப் 12 – ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ் மற்றும் ஐபோன் எக்ஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.

இதுவரை மொத்தம் விற்பனையான ஐபோன்களின் எண்ணிக்கை 103 கோடி

தலைமை வடிவமைப்பு அதிகாரி

2007-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஐபோனில் இருந்து தற்போது வெளியாகியுள்ள ஐபோன் எக்ஸ் வரைக்கும் அனைத்து மாடல்களையும் வடிவமைத்தவர் ஜோனதான் ஐவே.

இவருக்கு கீழே 15 பேர் கொண்ட குழு இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த வடிவமைப்பாளர்கள் இந்த குழுவில் வைத்துள்ளனர். ஆப்பிள் ஐபோன் எந்த நிறத்தில் வரவேண்டும், என்ன நீள, அகலத்தில் இருக்க வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்வது இந்தக் குழுவே.

2007-ம் ஆண்டு வெளியான முதல் ஐபோன் அந்த ஆண்டு வெளியான டைம் மேகசைனின் சிறந்த கண்டுபிடிப்பு விருதை வென்றது.

2012-ம் ஆண்டில் ஒரு நாளைக்கு 3,40,000 ஐபோன்கள் விற்பனையானது.

பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனின் விலை அமெரிக்காவில் உள்ள விலையின் இருமடங்காக இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனங்கள் வெளியிடக்கூடிய ஐபோன் விளம்பர போஸ்டர்களில் ஐபோனில் உள்ள கடிகாரம் 9.41 என்ற நேரத்தை காட்டும். ஏனெனில் அது ஸ்டீவ் ஜாப்ஸ் ஐபோனை முதன் முதலில் அறிமுகப்படுத்திய நேரம்.

அமெரிக்கர்கள் ஆப்பிள் ஐபோனை ஜீசஸ் போன் என்றே அழைக்கின்றனர்.

ஜெரோடு மெக்கென்னி என்ற ஸ்கைடைவர் 13,000 அடிக்கு மேல் இருந்த தனது ஐபோனை கீழே தவறவிட்டுவிட்டார். அதிர்ஷடவசமாக அந்த போனும் கிடைத்துவிட்டது. ஆனால் அப்போதும் ஐபோன் வேலை செய்திருக்கிறது.

ஐபோனுக்கு முதலில் பர்ப்பிள் என்றே வைப்பதாக இருந்தது. அப்போது அந்த மொபைல் தயாரிப்பு பிரிவைச் சேர்ந்தவர்களை பர்ப்பிள் டோர்ம் என்றே அழைப்பார்களாம்.

ஐ போன் பிரிவு மட்டும் 200 அறிவுசார் சொத்துரிமைகளை வைத்துள்ளது.

முதல் ஐபோனை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் அருகிலுள்ள ஸ்டார்பக்ஸ் கடைக்கு ஸ்டீவ் ஜாப்ஸ் விளையாட்டாக போன் செய்து 4,000 காபியை ஆர்டர் செய்தார். பின்பு உடனேயே போன் செய்து அதை ரத்து செய்துவிட்டார். விளையாட்டாக அவர் மேற்கொண்ட செயல் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x