Published : 18 Sep 2017 10:59 AM
Last Updated : 18 Sep 2017 10:59 AM

ஹூண்டாயின் சிஎன்ஜி ஆக்ஸென்ட்

கா

ர் உற்பத்தியில் இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழும் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் சிஎன்ஜி எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை வாயுவில் இயங்கும் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கமான காருடன் சிஎன்ஜி-யில் இயங்கும் வகையான கூடுதல் பாகங்களை நிறுவனமே தயாரித்து வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா பயண ஓட்டுநர்கள் பயன்படுத்தும் வகையில் சிஎன்ஜி ஆக்ஸென்ட் கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு இயக்குநர் ராகேஷ் ஸ்ரீவாத்ஸவா தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஆக்ஸென்ட் மாடல் கார்களில் சிஎன்ஜி-யில் இயங்குவதற்குத் தேவையான கருவிகள் தற்போது பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு தயாரிப்புகளை வெளியிடும் ஹூண்டாய் இப்போது வர்த்தக ரீதியிலான பிரிவினரின் தேவைகளுக்கும் இடமளிக்கும் வகையில் சிஎன்ஜி-யில் இயங்கும் ஆக்ஸென்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

சிஎன்ஜி பாகங்களுக்கு 3 ஆண்டு அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை நிறுவன உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அத்துடன் வேகக் கட்டுப்பாடு செயலி (எஸ்எல்எப்) எவ்வித கூடுதல் விலையும் இன்றி விற்பனைக்கு வந்துள்ளதாக நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

நிறுவனத்திலேயே சிஎன்ஜி கருவி பொருத்தப்பட்ட காராக வருவதால் இத்தகைய காருக்கு வங்கிக் கடனுதவி எளிதாகக் கிடைக்கும். சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான சலுகை அளிக்கும் மாநிலங்களில் இதற்கான சலுகையும் கிடைக்கும். மேலும் சிஎன்ஜி பொருத்துவதற்கு ஆகும் கால விரயமும் குறையும். வாடகை வாகன பிரிவினரிடையே இது வரவேற்பைப் பெறும் என நம்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x