Last Updated : 09 Sep, 2017 09:51 AM

 

Published : 09 Sep 2017 09:51 AM
Last Updated : 09 Sep 2017 09:51 AM

வீட்டுக்குள்ளே திரையரங்கம்!

ரு காலத்தில் ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது ஹோம் தியேட்டர் சிஸ்டம். இப்போதோ இது இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இது சந்தையில் 2,000 ருபாய் முதல் பல கோடி ருபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிறது. விலைக்கு ஏற்றப்படி ஒலியின் தரமும் ஒளியின் தரமும் மாறுகிறது என்பது உண்மைதான். ஆனால், நல்ல தரமான ஹோம் தியேட்டரை, கிட்டத்தட்ட திரையரங்குகளுக்கு இணையான ஒலியின் தரத்தில், சுமார் 30,000 ரூபாயில் நம் வீட்டில் அமைக்க முடியும் என்பதை நம்ப முடிகிறதா? இது எப்படிச் சாத்தியம் என்பதைப் பார்ப்பதற்கு முன், முதலில் ஹோம் தியேட்டர் பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.

ஹோம் தியேட்டர் என்றால் என்ன?

ஒலியையும் ஒளியையும் தரமான வகையில் நமக்கு அளிப்பதே ஹோம் தியேட்டர் சிஸ்டம். ஒலியில் மோனோ, ஸ்டீரியோ, Dolby 5.1, DTS 5.1, Dolby 7.1, DTS 7.1, Dolby True HD, மற்றும் DTS HD என்று பல வகைகள் உள்ளன. ஒளியில் PAL, NTSC, டிஜிடல், 720P HD, 1080P HD, True HD மற்றும் Ultra HD என்று பல வகைகள் உள்ளன. DVD அல்லது Pen drive அல்லது Bluray பிளேயரிலிருந்து ஒலி மற்றும் ஒளியைப் பெற்று, ஹோம் தியேட்டர் நமக்கு ஒளியைத் தொலைகாட்சி பெட்டி வழியாகவும், ஒலியை ஸ்பீக்கர் வழியாகவும், நாம் விரும்பும் வடிவில் வழங்குகிறது. ஹோம் தியேட்டர் சிஸ்டம் தன்னகத்தே கொண்டுள்ள சாதனங்களைப் பற்றிப் பார்போம்:

மீடியா பிளேயர்:

வீடியோ காஸெட் பிளேயரைப் போன்று DVD பிளேயரின் உபயோகமும் இன்னும் சில வருடங்களில் வழக்கொழிந்துவிடும், எனவே, Bluray பிளேயர் வாங்குவதுதான் புத்திசாலித்தனம். Bluray பிளேயர் வாங்கும்போதே, அதை wifi வசதியுள்ளதாகப் பார்த்து வாங்கிவிட்டால், நாம் Smart TV வாங்கவேண்டிய அவசியமில்லை. இதன் மூலம் TV வாங்குவதில் சுமார் 20,000 ருபாய் வரை மிச்சம் பிடிக்கலாம். Smart TV யின் செயலனைத்தையும் wifi enabled Bluray செய்துவிடும் என்ற புரிதல் இல்லாமல் பெரும்பாலான வீடுகளில் இரண்டையும் உபயோகப்படுத்துகிறார்கள். சோனி, சாம்சங், எல்ஜி, பானஸோனிக் மற்றும் ஃபிலிப்ஸ் போன்ற நிறுவனங்களின் Bluray பிளேயர் சந்தையில் 5,000 ரூபாய் முதல் கிடைக்கிறது. வசதியைப் பொறுத்து 3D Bluray அல்லது UltraHD பிளேயரும் வாங்கலாம்.

தொலைக்காட்சிப் பெட்டி:

தட்டைத் திரை டிவி வந்த பிறகு மெல்ல மெல்ல CRT TV-ன் உபயோகம் வழக்கொழிந்துவிட்டது. இப்பொழுது LCD, Plasma மற்றும் LED வகைகள் உள்ளன. ஒளியின் தரத்தைப் பொறுத்தவரை Plasma TVதான் சிறந்தது. ஆனால், ஆயுள் மற்றும் அதிக உற்பத்தி செலவால் அதன் உற்பத்தி வெகுவாகக் குறைந்து வருகிறது. LCD யின் புது வடிவம்தான் LED TV. நம் வசதியைப் பொறுத்து HD Ready அல்லது Full HD அல்லது 3D அல்லது UHD வசதிகொண்டது வாங்கலாம். சோனி, சாம்சங், எல்ஜி, பானஸோனிக் மற்றும் பிலிப்ஸ் போன்ற நிறுவனங்களின் LED TVயைச் சந்தையில் வாங்கலாம். இவை 10,000 ரூபாய் முதலான விலையில் கிடைக்கின்றன.

ஆம்ப்ளிபையர் (Amplifier):

Amplifier தான் ஹோம் தியேட்டர் சிஸ்டத்தின் உயிர்நாடி. ஒலி மற்றும் ஓளியை உள்வாங்கி இது தான் நமக்கு ஒளியைத் தொலைக்காட்சிப் பெட்டி வழியாகவும், ஒலியை ஸ்பீக்கர் வழியாகவும் தருகிறது. எவ்வளவு முடியுமோ, அந்த அளவு அதிகமாக இதற்குச் செலவு செய்வது புத்திசாலித்தனம். ஏனென்றால், ஹோம் தியேட்டரின் தரத்தை இதுதான் தீர்மானிக்கிறது. பெரும்பாலோனோர் செய்யும் தவறு என்னவென்றால், TV உற்பத்தி பண்ணும் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் Amplifierயை வாங்குவது.

அந்த நிறுவனங்கள் TV உற்பத்தியில்தான் தேர்ச்சி பெற்றவர்கள். யமாகா (Yamaha), ஒன்கியோ (Onkyo), டெனான் (Denon), நேட் (NAD), மாரண்ட்ஸ் (Marantz), கேம்பிரிட்ஜ் ஆடியோ (Cambridge Audio) மற்றும் னைல்ஸ் (Niles) எனப் பல நிறுவனங்கள் Amplifier-களைத் தயாரிக்கின்றன. யமாகா (Yamaha), ஒன்கியோ (Onkyo) மற்றும் டெனான் (Denon) போன்றவை குறைந்தவிலை Amplifier-ஐயும் தயாரிக்கின்றன. இதன் விலை சுமார் 20,000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது.

shutterstock_9772618ஸ்பீக்கர்கள் (Speakers)

Amplifierக்கு அடுத்தபடி முக்கியமானது ஸ்பீக்கர்கள். 5.1 சிஸ்டம் என்றால் ஐந்து ஸ்பீக்கர்களும் ஒரு சப்-ஊபரும் (Subwoofer), 7.1 சிஸ்டம் என்றால் ஏழு ஸ்பீக்கர்களும் ஒரு சப்-ஊபரும் (Subwoofer) இருக்கும். ஸ்பீக்கர்களில் சுவரில் மாட்டக்கூடிய புக்-செல்ப் (Book-shelf) மற்றும் தரையில் நிற்கக்கூடிய டவர் ஸ்பீக்கர், Vitual Sorround Bar என்று மூன்று வகை உண்டு. டவர் ஸ்பீக்கர் சற்று விலை அதிகம். இதை நமக்கு முன் இருக்கும் வலது மற்றும் இடது பக்கங்களுக்கு (Front left and right) உபயோகப்படுத்தினால், ஒலியின் தரம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

TV உற்பத்தி பண்ணும் பிரபல நிறுவனங்கள் மற்றும் ஆம்ப்ளிபையர் உற்பத்தி பண்ணும் பிரபல நிறுவனங்கள் ஸ்பீக்கர்களையும் தயாரிக்கின்றன. ஆனால், சமரசமில்லாத தரம், ஸ்பீக்கர் மட்டும் தயாரிக்கும் நிறுனங்களின் ஸ்பிக்கர்களில்தான் கிடைக்கும். DynAudio, JBL, Harman Kardon, Klipch, Q Acoustics, Davone, Bowera&Wilkins, Devialet, Revel, Edwards Audio, Stealth, Polk மற்றும் Opera ஆகிய பிரபல நிறுவனங்களின் ஸ்பீக்கர்கள் தரத்தில் சிறந்து விளங்குகின்றன. இவை தனியாகவும் மற்றும் 5.1 அல்லது 7.1 என்று மொத்தமாகவும் ஸ்பீக்கர்களை விற்கின்றன. இதன் விலை சுமார் 19,000 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கின்றது.

பயனுள்ள குறிப்புகள்:

தரமான ஸ்பீக்கர்களை வாங்குவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவற்றைச் சரியான வகையில், சரியான இடத்தில் நிறுவுவதும். நமக்கு முன் இருக்கும் மூன்று ஸ்பீக்கர்களும், நாம் உட்கார்ந்து இருக்கும் பொழுதுள்ள காதின் மட்டத்துக்கு இணையான உயரத்தில் இருக்க வேண்டும். Subwoofer-ன் டிரைவ் தரையைப் பார்த்தவண்ணம், சுவரின் ஓரத்தில் இருந்தால், அதன் செயல்பாடு மிகச் சிறப்பாக இருக்கும். தரையில் கார்பெட், ஜன்னலில் திரைகள் மற்றும் மெத்தென இருக்கும் சோபாக்கள் உபயோகப்படுத்தினால், ஒலி எதிரொலிக்காமல் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

எங்கு வாங்கலாம்

அமேசான், ஃப்ளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிடல் மற்றும் டாட்டா குரோமோ போன்ற வணிக நிறுவனங்களில் வாங்கலாம். சென்னையில் டெசிபில் (Decibel) மற்றும் Profx போன்ற நிறுவனங்களில் தேர்ந்தெடுப்பதற்கு நிறைய வகை சிஸ்டம்கள் உண்டு. பட்ஜெட் குறைவு என்றால், யமாகா, ஒன்கியோ அல்லது டெனான் வழங்கும் ஒட்டு மொத்த சிஸ்டத்தை (ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர்கள், சுப்-உபர் மற்றும் ப்ளுரே பிளேயர்) சுமார் 25,000 ரூபாயில் தற்காலிமாக வாங்கிக் கொள்ளலாம். ஸ்பீக்கர்களை மட்டும் பின்னாளில் நம் விருப்பத்தைப் பொறுத்து மாற்றிக் கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x