Published : 03 Sep 2017 11:27 AM
Last Updated : 03 Sep 2017 11:27 AM

குறிப்புகள் பலவிதம்: தொப்பையைக் குறைக்கும் அன்னாசி

# கீரை மசியல் செய்து இறக்கிவைக்கும்போது பாலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையையும் ஒரு டீஸ்பூன் அரிசி மாவையும் போட்டுக் கரைத்து ஊற்றினால் கீரை கெட்டியாக இருக்கும். சுவையும் கூடும்.

# கொழுக்கட்டைகளை இறக்கியதும் மூடிவைக்கக் கூடாது. மூடியில் ஆவியடித்து உள்ளே நீர் வடிந்து கொழுக்கட்டைகள் ஊறிவிடும். அதனால் காற்றுப் புகும் அளவுக்குச் சிறிது இடைவெளிவிட்டு மூடிவையுங்கள்.

# கடுக்காயைப் பொடி செய்து தினமும் இரவில் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கல் தீரும்.

- தாரா, கோவை.

# தினமும் காலை இரண்டு துண்டு அன்னாசிப்பழத்தைச் சாப்பிட்டுவந்தால் தொப்பை குறையும்.

# தண்ணீரில் முதல் நாள் இரவே வேப்பிலைகளைப் போட்டுவைத்து, அடுத்த நாள் காலை குளித்தால் உடல் வலியும் சூடும் குறையும்.

# உருளைக் கிழங்கைத் தண்ணீர் சேர்க்காமல் தோலுடன் அரைத்துத் தினமும் முழங்காலில் தடவிவந்தால் மூட்டு வலி குறையும்.

# வாரம் ஒரு முறை எலுமிச்சம்பழத்தைத் தலையில் தேய்த்துக் குளித்துவர உடல் சூடு குறையும். பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

- வே.தேவஜோதி, மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x